பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 17 போகும். அவன் இறந்து போவானாகில், பிறகு நம்முடைய பாடு அவஸ்தை தான். நான் மறுபடி இன்று காலையில் வருவதாகச் சொல்லி விட்டு வந்தேன். இப்போது அங்கே போவதற்கு ஆயத்தமானேன். அதற்குள் நீங்களும் வந்தீர்கள்" என்றார். அந்த வரலாற்றைக் கேட்ட பட்டாபிராம பிள்ளை, "சரி, அப்படி யானால் நானும் உங்களோடு கூடவே வருகிறேன். புறப்படுங்கள், நானும் அவனைப் பார்த்துவிட்டுப் போகிறேன்" என்றார். உடனே இருவரும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு நேராக ஆஸ்பத்திரிக்குப் போய் அங்கே இருந்த பெரிய டாக்டர் துரையைக் கண்டு கோபாலசாமியின் அப்போதைய நிலைமை யைப் பற்றி விசாரித்ததன்றி, அவரோடுகூடச் சென்று அவனை நேரிலேயே பார்த்தனர். அவனது நிலைமை முதல் நாள் மாலையில் இருந்ததைவிட அதிக கேவலமாக இருப்பதாகத் தோன்றியது. அவனுக்கு அப்போதைக்கப்போது பலவந்தமாக உள்ளே செலுத்தப்பட்ட சொற்ப அளவு பாலைத் தவிர, வேறு எவ்வித ஆகாரமும் இல்லாமையால், அவனது கையின் நாடி தளர்ந்து நாளுக்கு நாள் மெலிந்து பலவீனப்பட்டு வருவதாக டாக்டர் மறுபடியும் கூறினார். அதைக் கேட்டுக் கொண்ட பட்டாபி ராம பிள்ளை போலீஸ் கமிஷனரை அனுப்பிவிட்டு அவ்விடத்தில் இருந்து புறப்பட்டுத் தமது பங்களாவிற்குப் போய்ச் சேர்ந்தார். அப்போது மணி ஒன்பதரைக்கு அதிகம் ஆய்விட்டது. ஆகையால், அவர் மனோன்மணியம்மாளிடம் சென்று அதிகமாய்ப் பேச அவகாசம் இல்லாமல் போய்விட்டது. அதுவுமன்றி, அவளுக்கும் அன்று காலை 10-மணி முதல் பரீட்சை ஆதலால், அவள் கலா சாலைக்குப் போகப் புறப்பட்டுக் கொண்டிருப்பாள் என்ற நினைவும் உண்டானது ஆகையால், பட்டாபிராம பிள்ளை அவளிடம் தாம் தெரிவிக்க வேண்டிய விஷயங்களை இரவில் தெரிவித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டு, தமது ஸ்நானம், போஜனம் முதலியவற்றை முடித்துக் கொண்டு உடனே புறப்பட்டுத் தமது கச்சேரிக்குப் போய்விட்டார். காலையில் எழும்பூரில் இருந்து எட்டு மணி சுமாருக்குத் தமது பங்களாவை அடைந்த மனோன்மணியம்மாள் நேராகத் தனது unit.6%.u.HH-2