பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மாயா விநோதப் பரதேசி சயனக் கிரகத்திற்குள் நுழைந்து கட்டிலின் மீது சாய்ந்து கொண்டாள். அன்றைய பரீட்சையில் தான் எப்பாடு பட்டாயினும் தேறவேண்டும் என்ற மனவுறுதியோடு அவள் பல மாத காலமாய் இரவு பகல் உழைத்து உடம்பையும் மூளையையும் வதைத்துப் படித்து வந்திருந்தாளாயினும், எழும்பூரில் இருந்து திரும்பி தமது ஜாகைக்கு வருவதற்குள், அவளது உடம்பில் இன்னதென்று விவரிக்க இயலாத ஒருவித பாதை உண்டாகிவிட்டது. மனதில் பெருத்த வேதனையும் கவலையும் தோன்றிவிட்டன. தான் அரும்பாடுபட்டு தனது உயிரில் பெரும் பாகத்தையும் செலவிட்டு, உலகில் மற்ற சகலமான பாஷைகளிலும் சிலாக்கியமானதாய் எல்லோராலும் கருதப்படும் இங்கிலீஷ் பாஷையைக் கற்றுக் கரைகண்டு, அதில் பொதிர்ந்து கிடக்கும் அற்புதங்களையும், உணர்ந்த ஞானத்தையும் பயின்று பெண்பாலார் பெறுதற்கு அரிதான பி.ஏ., பட்டத்தை சம்பாதிக்கப் போகும் தருணத்தில், தனது தந்தை இங்கிலீஷ் நாகரிகத்தையும், இங்கிலீஷ் பாஷை கற்றவரின் மேம்பாட்டையும் சிறிதும் அறியாதவர்களான சுத்த கர்னாடக மனிதரது வீட்டில் தன்னைக் கொண்டு போய் வாழ்க்கைப் படுத்தித் தனது வாழ்நாள் முழுதும் தன்னை வேதனைக் கடலில் ஆழ்த்தப் போகிறாரே என்ற கவலையும், மலைப்பும் அந்த மடந்தையின் மனத்தில் தோன்றி விட்டன ஆதலால், முன்னரே நிரம்பவும் தளர்வடைந்து துர்ப்பலமாய் இருந்த அவளது உடம்பு அப்படியே சோர்ந்து விழுந்து விட்டது. அவளது மனத்தில் சகிக்க இயலாத துயரமும் அழுகையும் எழுந்து அவளை மேற்கொள்ளத் தொடங்கி விட்டன. அடிக்கடி கண்களில் இருந்து கண்ணிர் பெருகி வழிந்தோடியது. அவளது கைகால் முதலிய அங்கங்கள் யாவும் பதறித் துடிக்க ஆரம்பித்தன. "ஆகா! என்ன ஆச்சரியம் இது! கடைசியில் என்னைக் கொண்டு போய் இப்படிப்பட்ட பாழ்நரகில் வீழ்த்துவதற்கா என் தகப்பனார் என்னை இவ்வளவு தூரம் படிக்க வைத்து, நான் மேலான விவேகத்தையும், ஞானத்தையும் அடையும்படி செய்தார். ஆகா! நான் இதுவரையில் கற்றுக் கொண்ட அற்புதமான விஷயங்களை எல்லாம் அடியோடு மறந்து மன்னார் குடியார் வீட்டில் போய் எப்போதும் அடுப்பங் கரையில் உட்கார்ந்து கொண்டு, <?865Tт,