பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 111 இப்போது நான் சொன்னது போலவே ஒரு கடிதத்தில் எழுதிக் கொடுக்கிறேன். அதைக் கொண்டு போய் நீர் அவனிடம் சேர்த்து, இனி இம்மாதிரியாக எனக்குக் கடிதம் எழுத வேண்டாம் என்று நான் கண்டித்துச் சொன்னதாகச் சொல்லும். இந்தத் தடவை அவனை மன்னித்து விடுகிறேன். இனிமேல் இப்படிப்பட்ட கடிதம் வந்தால், அதை உடனே போலீசாருக்கு அனுப்பி அவன்மேல் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்வதோடு, கடிதம் கொண்டு வருகிறவருக்கும் தக்க மரியாதை நடத்தி அனுப்புவேன் என்று மறக்காமல் அவனிடம் சொல்லும்; தெரிகிறதா?" என்றான். அதைக் கேட்ட பட்டணத்தான், "எனக்கு விஷயம் தெரியாது. என் எஜமானர் இதை உங்களிடம் கொடுத்து, நீங்கள் கொடுக்கும் பதிலை வாங்கிக் கொண்டு வரச் சொன்னார். நீங்கள் எப்படி பதில் எழுதினாலும், அதை நான் வாங்கிக் கொண்டு போகத் தயார், பதிலே இல்லை என்றாலும், நான் உடனே புறப்பட்டுப் போக சித்தனாய் இருக்கிறேன். நீங்கள் சொன்னபடி நான் கூலிக்காரன். எனக்கு இதில் யாதொரு சம்பந்தமுமில்லை" என்றான். உடனே மாசிலாமணி தன் வாயால் சொன்னது போலவே ஒரு காகிதத்தில் எழுதி அதை ஓர் உறைக்குள் போட்டு ஒட்டி அந்தப் பட்டணத்தானிடம் கொடுக்க, அவன் அதைப் பெற்று, தான் போவதாக அவனிடம் கூறிய வண்ணம் அவ்விடத்தை விட்டு வெளியில் போய்விட்டான். உடனே மாசிலாமணி பெருத்த துப்பட்டி ஒன்றை எடுத்து தலை முதல் கால் வரையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு கட்டிலில் சாய்ந்து விட்டான். அவனது மன நிலைமை விவரிக்க இயலாத பரம சங்கட நிலைமையாக இருந்தது. தேகமும் கட்டிலடங்காமல் பதறியது. அவனது மனம் விபரீதமான எண்ணங்களை எல்லாம் கொண்டு தவித்தது. "நான் எந்தக் காரியத்தில் இறங்கினாலும் அது ஏமாற்றமாகவே முடிவதோடு, பெருத்த அநர்த்தத்தையும், லட்சக் கணக்கில் பொருள் நஷ்டத்தையும் விளைவிக்கிறதே! நான் என்னுடைய ஆட்களைப் புரோகிதராகவும் விருந்தாளிகளாகவும் வேஷம் போட்டு, பொய்க் கலியாணம் நடத்தி பெண்ணை ஏமாற்ற முயற்சித்தால், பெண் அதற்கு முன்னாலேயே என்னை ஏமாற்றும்