பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† 14 மாயா விநோதப் பரதேசி களையும் அளித்திருந்தும், ஸ்திரி விஷயத்தில் மகா துர்ப்பாக்கிய வானாகப் படைத்து விட்டானே! நான் முதலில் வடிவாம்பாளை நாடினேன். அவளோ பெருத்த வாயாடி, அவளால் என் கால் நொண்டியானதோடு, நானும் என் அண்ணனும் சிறைச்சாலைக் குப் போனோம். மனோன்மணியம்மாளை அடைய GT55ঠা6টfে னேன். அதற்குப் பதில் வஞ்சக வேஷம் ஒன்று வந்து என் ரகசியத்தை அபகரித்துக் கொண்டு போயிற்று. ரமாமணியம்மாளை வைத்து இன்பமுற நினைத்தால், அவர் மூக்கறுபட்ட மூளியாய் விட்டாளே ஆகா. கஷ்டம் கஷ்டம் இது சகிக்கவே முடியாத நரக வேதனை சே என் ஜென்மமும் ஒரு ஜென்மமா ரமாமணியம்மா ளுடைய நிலைமையை நினைக்கும் போது எனக்கே இப்படிப் பட்ட வேதனை உண்டாகிறதே. மூக்கை இழந்த அவளுக்கு இது எப்படி இருக்குமோ தெரியவில்லையே! அந்த ஆத்திரத்தில் யாராய் இருந்தாலும் பார்ப்பார்களா? தன்னை மானபங்கப் படுத்திய ஆள்களின் மேல் அவளுக்கு உண்டான ஆத்திரத்தில் அவள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விடுவாளோ என்னவோ தெரியவில்லையே! அந்த ஆத்திரத்தில் முன் பின் யோசியாமல் அவள் எதையாவது உளறி வைத்து, அதனால் என் தலைக்கும் கல் வரும்படியான காரியத்தைச் செய்து விடுவாளோ என்னவோ தெரியவில்லையே! இந்த நிலைமையில் நான் உடனே புறப்பட்டுப் போய் அவளைப் பார்த்துத் தேறுதல் சொல்லாமல் இருந்து விட்டால், அது அவளுடைய மனசுக்கு நிரம்பவும் விசனமாக இருக்குமே. நான் போய்ப் பார்த்தாலோ, என் மேலேயே கண்ணோட்டமாக இருக்கும். இந்த ஊர்ப் போலீசார் உடனே மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு விடுவார்கள். நான் பட்டணம் போவதும் அவசியமாகத் தோன்றுகிறது. போனால் கெடுதல் நேரும் போலவும் தோன்று கிறது. நான் ரமாமணியம்மாளைக் கண்டு அவளை சாந்தப்படுத்தி, அவளை நான் கடைசி வரையில் காப்பாற்றுவதாகச் சொல்லிவிட்டு வந்தாலன்றி, அவளுக்கு என் மேல் ஆத்திரமும் அருவருப்பும் உண்டாவது நிச்சயம். தன் கோபத்தில் அவள் என்னையும் காட்டிக் கொடுத்தாலும் கொடுத்து விடக் கூடியவளே. அதுவுமன்றி, இடும்பன் சேர்வைகாரனிடம் என்னுடைய உயிரே இருக்கிறது. ஆகையால் இந்தச் சமயத்தில்