பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மாயா விநோதப் பரதேசி அதைக் கேட்ட மாசிலாமணி சிறிது நேரம் சிந்தனை செய்து பார்த்தான். அந்த அம்மாள் யாராக இருக்கலாம் என்று அவன் நினைத்து நினைத்துப் பார்த்தான். அவனுக்கு எதுவும் புலப்பட வில்லை. அவளை அழைத்து வரும்படி உடனே வேலைக் காரனிடம் அவன் கூற, வேலைக்காரன் முன் செய்தது போல வெளியில் போய், சிறிது நேரத்தில் நமது நீர்மேல்குமிழி நீலலோசனியம்மாளை அழைத்து வந்து மாசிலாமணி இருந்த விடுதியில் விட்டுவிட்டு உடனே வெளியில் போய்விட்டான். இடும்பன் சேர்வைகாரனது விஷயத்தில் போலீசார் தந்திரம் செய்து கடிதம் கொணர்ந்தது போல, ரமாமணியம்மாளின் விஷயத்திலும் அவர்கள் ஏதாவது கபட நாடகம் நடிக்கிறார்களோ என்ற எண்ணம் மின்னல் தோன்றி மறைவது போல மாசிலாமணி யின் மனதில் உதித்து, அந்த இரண்டொரு நிமிஷ நேரத்தில் அவனை வேதனைக் கடலில் ஆழ்த்தி விட்டது. ஆயினும், அவன் நமது நீலலோசனியம்மாளது சுத்த சாத்விகமான வடிவத்தைக் காண, அவனது சந்தேகத்தில் பெரும்பாகமும் உடனே நிவர்த்தி யாகி விட்டது. உத்தம ஜாதி ஸ்திரீகள் எவ்வளவு தங்களுக்கு அதிக வயது ஆகியிருந்ததாலும், சாண் பிள்ளையாக இருக்கும் ஆண் பிள்ளைகளைக் கண்டால் கூட, எப்படி இயற்கையிலேயே நாணம், அச்சம், பணிவு, அடக்கம் முதலிய லட்சணங்களில் வழுவாமல் நடந்து கொள்ளுவார்களோ, அது போல நமது நீலலோசனியம் மாள் மாசிலாமணியைக் கண்டு மிகுந்த கிலேசம் அடைந்தவளாய் நாணிக்கோணிக் கதவின் மூலையில் மறைந்து நின்றதைக் காணவே, அவனது மனம் தனது சஞ்சலத்தை விலக்கி ஒருவித திடத்தைக் கொண்டது. அவன் அந்த அம்மாளிடம் நிரம்பவும் மரியாதையாகப் பேசத் தொடங்கி, "அம்மா! நீங்கள் பட்டணத்தில் இருந்தா வருகிறீர்கள்? அதோ இருக்கும் விசிப்பலகையின் மேல் உட்கார்ந்து கொள்ளுங்கள்" என்றான். உடனே நீலலோசனியம்மாள் தனது மடியிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்து மரியாதையாகவும் பணிவாகவும் மாசிலாமணியினிடம் கொடுத்த வண்ணம், "ஆம்; நான் பட்டணத்திலிருந்துதான் வருகிறேன். பட்டணத்தில் நடந்த துக்ககரமான விஷயங்களை