பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 117 எல்லாம் நீங்கள் சமாசாரப் பத்திரிகையின் மூலமாகத் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுடைய முகம் நிரம்பவும் வாட்டமடைந்து விசனத்தைக் காட்டுவதைப் பார்த்தால், பட்டணத்தில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைப் பற்றியே நீங்கள் சிந்தித்து விசன முற்றிருந்த சமயத்தில் நான் வந்திருப்பதாகத் தோன்று கிறது. சென்னை ஆஸ்பத்திரியில் உள்ள ரமாமணியம்மாள் உங்க ளிடம் இந்தக் கடிதத்தைக் கொடுக்கும்படி என்னை அனுப்பி னாள்" என்றாள். அந்த அம்மாள் கூறிய சொற்களைக் கேட்டுக் கொண்ட மாசிலா மணி அந்தக் கடிதத்தைப் பிரித்தான். அதன் மேல் விலாசத்தின் எழுத்தையும், உள் பக்கத்தில் இருந்த எழுத்தையும், அவனது கண்கள் உடனே ஆராய்ச்சி செய்தன. உண்மையிலேயே அந்தக் கடிதம் ரமாமணியம்மாளால் எழுதப்பட்டதென்ற நிச்சயம் அவனது மனத்தில் உண்டாயிற்று. அவன் உடனே அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததைத் தனக்குள்ளாகவே படித்து முடித்தான். ரமாமணி அம்மாள் முதலியோர் கும்பகோணத்திலிருந்து புறப் பட்டது முதல் சென்னையில் தாங்கள் அங்கஹlனப்பட்டு ஆஸ்பத்திரியில் படுத்திருந்தது வரையிலுள்ள வரலாறு முழுவதை யும் ரமாமணியம்மாள் சுருக்கமாக அந்தக் கடிதத்தில் எழுதி யிருந்தாள். நீலலோசனியம்மாள் தாய் என்றும், பக்கிரியா பிள்ளை அந்த அம்மாளது மகன் என்றும், அவர்கள் சென்னையில் இடும்பன் சேர்வைகாரனுக்குக் கூறியது. நமது வாசகர்களுக்கு நினைவிருக் கலாம். அதை மாசிலாமணிக்கு எழுதித் தெரிவித்தால், அதைப் பற்றி அவன் பிரஸ்தாபிக்க நேரும்போது, அது பொய் என்று நீல லோசனியம்மாள் மறுப்பதோடு தம்மைப் பற்றியும் கெட்ட அபிப்பிராயம் கொள்வாள் என்ற நினைவினால், அந்த வரலாற்றை எழுதாமல், பக்கிரியா பிள்ளை என்பவன் தனது தந்தைக்குப் பரிச்சயம் உள்ளவனென்றும், அவனும் ஏதோ சொந்தக் காரியத் தைக் கருதி பட்டணம் வரும் போது தற்செயலாய்த் தனது தந்தையைக் கண்டு தங்களோடு கூடவே வந்ததாகவும், நீல லோசனியம்மாள் சிதம்பரம் ஸ்டேஷனில் வந்து தங்கள் வண்டி யில் ஏறியதாகவும், அந்த அம்மாளின் பழக்கம் முற்றி சிநேகமாக