பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 18 மாயா விநோதப் பரதேசி மாறிப்போனதால் அவளும் சத்திரத்தில் தங்களோடு கூட இருந்ததாகவும் எழுதி இருந்தாள். ஆனால், நீலலோசனியம்மா ளுக்கும் தங்களுக்கும் ஏற்பட்ட முக்கியமான சம்பந்தத்தை அவள் அந்தக் கடிதத்தில் எழுதாமல் விட்டுவிட்டாள். அதாவது, நீல லோசனியம்மாள் கும்பகோணத்தில் தங்கள் சவரக்ஷணையில் இருக்கப் போவதையும் அவளுடைய சொத்தை எல்லாம் அவள் தங்களுக்கே எழுதி வைத்து விட்டதையும் அவள் வெளியிடாமல் தான் சாட்சி சொல்லாமல் ஒளிந்து கொண்டிருந்து இடும்பன் சேர்வைகாரனைத் தப்ப வைப்பதற்காகவே அந்த அம்மாள் கும்பகோணத்திற்கு வந்திருப்பதாக மாத்திரம் கடிதத்தில் அவள் குறித்திருந்தாள். அதில் மற்ற விவரங்களை எல்லாம் எழுதி, முடிவில் ரமாமணியம்மாள், என் கண்ணாளரும், உயிருக்குயிரான காதலரும், என் இருதய கமலத்தில் நான் சதாகாலமும் வைத்துப் பூஜை செய்து வரும் ஒப்புயர்வற்ற உயிர்த் தெய்வமுமான உங்களைப் பார்க்க வேண்டும் என்று என் கண்கள் பறக்கின்றன. கூண்டில் அடைபட்ட கிளி போல என் மனம் துடிதுடித்துப் பதறுகிறது. கோமளாங்கரான உங்களுடைய இன்ப வடிவம் நான் பார்க்கும் இடத்தில் எல்லாம் நிறைந்து என் அகக்கண்ணிற்கு முன் சான்னித்தியமாக நின்று தரிசனம் தந்தபடி இருந்து உங்களைப் பார்க்க வேண்டும் என்று சதா சாவதா காலமும் என்னை இடித் திடித்துத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் நீங்கள் என்னைப் பார்த்தால், உங்களுக்கு என்னிடமுள்ள ஆசை எல்லாம் அருவருப்பாக மாறிவிடும் என்ற எண்ணம் உண்டாவதால், இந்த நிலைமையில் நான் உங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை அடக்கிக் கொண்டிருக்கிறேன். இந்த ஆஸ்பத்திரிக்கு கல்கத்தாவில் இருந்து நிரம்பவும் பிரக்யாதி பெற்ற ஒரு பெரிய டாக்டர் வந்திருக்கிறார். அவருடைய பெயர் மிஸ்டர் வெல்டன் (Mr. Weldone) என்பதாம். இந்த ஆஸ்பத்திரியின் இரண்டாவது டாக்டரான ஒரு முதலியார் அந்ததத் துரையை ஒரு நாள், நாங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து வந்தார். நான் அவர்களைப் பார்த்து வெட்கி என் முகத்தை மறைத்துக் கொண்டேன். அவர் என்னை நோக்கி, நிரம்பவும் வாஞ்சையோடு பேசத் தொடங்கி, "அம்மா! ஏன் வெட்கப்படுகிறாய்? இதெல்லாம் கர்மரோகம்; அவரவர்கள்