பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மாயா விநோதப் பரதேசி னாலும், சகிக்க இயலாத வேதனையினாலும் தவித்துத் தடுமாற்றங் கொண்டிருந்த அவனது மனம் உடனே சாந்த மடைந்து, உற்சாகம் கொள்ளத் தொடங்கியது. முகம் சந்தோஷத்தினால் சிறிது மலரத் தொடங்கியது. அந்தக் கடிதம் போலீஸ்காரரது வற்புறுத்தலினால் எழுதப்பட்டதல்ல என்றும், உண்மையிலேயே ரமாமணியம்மா ளால் எழுதப்பட்ட கடிதம் என்றும் மாசிலாமணி உடனே தீர் மானித்துக் கொண்டு மேலும் எண்ணமிடத் தொடங்கி, "நல்ல சமயத்தில் இந்தக் கடிதம் வந்தது. நான் பட்டணம் போகிறதா, போகிறதில்லையா என்பதை நிச்சயிக்கமாட்டாமல் தர்ம சங்கட நிலைமையில் இருந்த தருணத்தில் இது அமிர்த சஞ்சீவி போல வந்து சேர்ந்தது. ரமாமணி சாதாரணமான மனுவியா! அவள் மகா புத்திசாலி, அதுவுமன்றி, அவள் என்னிடம் ஒரே உறுதியான பற்றும் பிரியமும் வைத்திருப்பவள் என்பது நிச்சயம். இடும்பன் சேர்வைகாரனுடைய விஷயத்தில் அவள் செய்திருக்கும் தந்திரமே நல்ல தந்திரம். ஒரே ஒரு சாட்சியான இந்த அம்மாள் ஒளிந்து கொண்டால், போலீசார் அவனை என்ன செய்ய முடியும் சில தினங்கள் வரையில் பார்த்துவிட்டு பார்த்துவிட்டுப் பேசாமல் அவனை வெளியில் துரத்தி விடுவார்கள். வேறே யாராவது ரமா மணியைப் போல மூக்கறுபட்டிருந்தால், அப்படி அறுத்தவர் தங்களுடைய சொந்தத் தாய் தகப்பன்மாராக இருந்தால் கூட கொஞ்சமும் தாட்சணியம் பார்க்காமல் போலீசாரிடம் காட்டிக் கொடுத்திருப்பார்கள். ரமாமணி என் மேல் வைத்துள்ள அந்தரங்க மான வாஞ்சையினால் அதைப் பொறுத்துக் கொண்டு, அந்த முரடர்கள் தப்பும்படியான விதமாய் வாக்குமூலம் கொடுத்திருக்கி றாளாம். இந்த உலகத்தில் வேறே யார் இவ்வித அபார புத்தி யோடும் பெருந்தன்மையோடும் நடந்து கொள்ளப்போகிறார்கள். அந்த ஆள்களையும் போலீசார் ஒன்றும் செய்யமுடியாது. அவர் களும் சில தினங்களில் தப்பி வந்து விடுவார்கள். நல்ல வேளை யாக கல்கத்தாவிலிருந்து மிஸ்டர் வெல்டன் என்ற டாக்டர் இந்தச் சமயத்தில் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார். அவர் வராவிட்டால், ரப்பர் மூக்கு, காது முதலியவை வைக்கலாம் என்று வேறே யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள். அவளுடைய மூக்காயிருந்தால் என்ன, இயற்கையில் உண்டான மூக்கானால் என்ன, அவளுடைய