பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 121 முகத்தோற்றம் விகாரப்படாமல் இருப்பதே எனக்குப் போது மானது. அவளுடைய முக்கு எதனால் ஆனதாக இருந்தாலும், அதனால் எனக்கு லாபமுமில்லை; நஷ்டமுமில்லை. இப்போது என்னுடைய ஒரு காலின் பாதி பாகம் இல்லை. அதனால் எனக்கு இப்போது எவ்வித உபத்திரவமும் உண்டாகவில்லை. நான் முடவன் என்று மற்றவர் நினைப்பார்களேயன்றி, நான் எவ்வித வித்தியாசத்தையும் உணரவே இல்லை. இது போலவே ரமாமணி யம்மாளுக்கும் புண் ஆறிப்போன பிறகு ஒட்டு மூக்கு வைத்து விட்டால், அதுவும் இயற்கையாகி விடுகிறது. அவள் வரட்டும்; நான் ஸ்திரீகள் விஷயத்தில் மாத்திரம் மகா தரித்திர அதிர்ஷ்டம் உடையவனல்லவா? என்மேல் கொஞ்சமும் பிரியம் வைக்காத வாயாடிகளையும் மோசக்காரிகளையும் கண்டு, அவர்கள் மேல் ஆசை வைத்து பெருத்த பொருள் நஷ்டத்தையும், மன வேதனை யையும், வேறு துன்பங்களையும் விலைக்கு வாங்கிக் கொள்வதை விட, என்னிடத்தில் மனப்பூர்த்தியான வாஞ்சையும் பிரேமையுங் கொண்டு, அதனால் தன் புருஷனைக் கூட விஷம் வைத்துக் கொன்றவளும், எனக்காகத் தன் மூக்கை இழந்து விகாரப்பட்ட வளும், இன்னம் எனக்காகத் தன் உயிரையும் கொடுக்கக் கூடியவளுமான ரமாமணியை நான் வெறுத்து விலக்கினால், அவளைவிட சிலாக்கியமான வேறு ஸ்திரி எனக்கு வந்து வாய்ப்பாள் என்று நான் நினைப்பது வீண் மனப் பிராந்தியாகத்தான் முடியும். எனக்கு வந்து வாய்க்கும் பெண்ணினால் எனக்கு ஏதாவது அதிருப்தி இருக்க வேண்டும் அல்லவா? அதற்காக இவளுக்கு மூக்கில் ஊனம் ஏற்பட்டது போலிருக்கிறது. அந்த ஒர் ஊனத்தைத் தவிர, மற்ற எந்த அம்சத்திலும், நான் இவளிடம் குற்றம் கண்டு பிடிக்க முடியாது. அந்த ஊனமும் இவளிடம் இயற்கையிலேயே இருந்ததல்ல. அதுவும் என்னால் அவளுக்கு உண்டானதே அன்றி வேறல்ல. ஆகையால், நான் இனி திருப்தி அடைந்து இவள் ஒருத்தியோடு என் மனசை அடக்கிக் கொள்ளுகிறேன்" என்று தனக்குத்தானே பலவாறு சிந்தனை செய்த பிறகு, தனக்கெதிரில் கதவின் மூலையில் வணக்கமாக நின்று கொண்டிருந்த நமது நீல லோசனியம்மாளை நோக்கி, "அம்மா கடிதத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். உங்களுடைய வரலாறும்