பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22 மாயா விநோதப் பரதேசி இதில் எழுதப்பட்டிருக்கிறது. அதையும் தெரிந்து கொண்டேன். நீங்கள் தக்க பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உங்கள் ஜாடையிலேயே நன்றாகத் தெரிகிறது. அதுவுமன்றி, ரமாமணி யம்மாளும் எழுதி இருக்கிறாள். உங்களுடைய அந்தஸ்துக்குத் தக்கபடி உங்களை நான் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டும். இந்த நிமிஷம் முதல் நீங்கள் இந்த மாளிகையை உங்களுடைய சொந்த மாளிகையாக மதிக்கலாம். இங்கேயுள்ள வேலைக்காரர்கள் எல்லோரும் என்னிடம் எப்படி நடந்து கொள்ளு வார்களோ அது போலவே உங்களிடமும் நடந்து கொள்ளும்படி உத்தரவு செய்து விடுகிறேன். நீங்கள் நேற்று மாலையில் பட்டணத்திலிருந்து புறப்பட்டிருப்பீர்கள். இப்போது நீங்கள் முதலில் உங்களுடைய ஸ்நானம் சாப்பாடு முதலிய காரியங்களை முடித்துக் கொள்ளுங்கள். பிறகு நாம் சாவகாசமாய்ப் பேசிக் கொள்வோம்" என்றான். நீலலோசனியம்மாளின் முகம் நன்றியறிதலினால் மலர்ந்தது ஆனாலும், ஸ்திரீஜாதிக்குரிய இயற்கையான நாணத்தினால் அதை அவள் ஒருவாறு அடக்கிக் கொண்டவளாய், "நான் ரயிலிலிருந்து இறங்கிய பின் காலையில் காவிரியாற்றுக்குப் போய் ஸ்நானத்தை முடித்துக் கொண்டுதான் நான் இங்கே வந்தேன். நான் ஒரு நாளைக்கு ஒரே வேளைதான் போஜனம் பண்ணுகிறது. இனி நாளைய மத்தியானம் வரையில் எனக்கு அன்ன விசாரம் இல்லை. நேற்று ரயிலில் ஜன நெருக்கம் அதிகமாக இருந்ததாகையால், இராத்திரி முழுதும் நான் கண்ணை மூடவே இல்லை. நான் தலை மறைவாக இருப்பதற்கு ஏதாவது ஒர் இடம் காட்டினால், நான் அங்கே இருந்து சிரமபரிகாரம் செய்து கொள்ளுகிறேன். இந்த வீட்டிலேயே இடம் கொடுத்தாலும் சரி, அல்லது வேறே எங்கே யாவது கொடுத்தாலும் சரி என்றாள். அதைக் கேட்ட மாசிலாமணி சிறிது நேரம் சிந்தனை செய்து, "சரி: நீங்கள் இருப்பதற்குச் செளகரியமான இடம் வேறே எங்கேயும் இல்லை. ஆனால், நீங்கள் இந்த வீட்டில் இருப்பதில் சில இடைஞ்சலும் இருக்கிறது. இந்த ஊரில் என் தமயனார் சர்க்கார் வக்கீலாக இருந்தவர். இந்த ஊரில் உள்ள சர்க்கார் உத்தியோகஸ்தர்