பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†24. - மாயா விநோதப் பரதேசி நானும் எத்தனையோ வீடுகளைப் பார்த்திருக்கிறேன். நானே மெத்தை வீடு படைத்து வாழ்ந்தேன். இந்த வீட்டில் உள்ள வேலைப்பாடுகளைப் போல நான் எங்கேயும் பார்க்கவில்லை. ஒவ்வொரு கதவு நிலையும் தேர்ச்சிங்காரம் போல் அல்லவா அபார மான வேலைப்பாடுகளும், பதுமைகளும், செடி கொடிகளும் நிரம்பப் பெற்றதாய் இருக்கிறது. ஒவ்வோர் இடத்தின் அழகும் கண்ணைப் பறிக்கிறதே" என்று மிருதுவான குரலில் கூறினாள். அந்தப் புகழ்ச்சியான மொழியைக் கேட்ட மாசிலாமணி மிகுந்த களிப்பும், உற்சாகமும் தற்பெருமையும் அடைந்தவனாய், "இந்த விடு கட்ட நான் மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறேன். இவ்வளவு ரூபாய்ச் செலவு செய்து கட்டப்பட்ட வீடு இந்த ஜில்லாவிலேயே வேறே எந்த இடத்திலும் இல்லை என்று என்னுடைய சிநேகிதர் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தக் கதவு நிலைகளைப் பார்த்தே நீங்கள் இவ்வளவு தூரம் ஆச்சரியப் படுகிறீர்களே! இன்னம் இந்த வீட்டில் உள்ள மகா மகா அருமை யான வேலைப்பாடுகளையும், சிங்காரங்களையும் பார்த்தால் என்ன சொல்லுவிர்களோ! எல்லாவற்றையும் நான் உங்களுக்குக் காட்டுகிறேன் பாருங்கள். நாளைய தினம் நீங்கள் ரமாமணி யம்மாளுடைய வீட்டிற்குப் போனால், அதற்குப் பிறகு இங்கே எப்போது வருவீர்களோ" என்று கூறிய வண்ணம் அந்த வீட்டின் மூன்று கட்டுகளின் கீழ்ப்பாகம், முதல் உப்பரிகை, இரண்டாவது உப்பரிகை, மூன்றாவது உப்பரிகை ஆகிய எல்லா இடங்களுக்கும் நமது நீலலோசனியம்மாளை அழைத்துக் கொண்டு போய்த் தனது சயனமாளிகை, கூடங்கள், பொக்கிஷ அறை முதலிய சகலமான இடங்களையும் காட்டினான். ஆங்காங்கு இரண்டோர் அறைகள் பூட்டப்பட்டிருந்தன. அவைகளின் திறவுகோல் அப்போது கீழே இருந்தமையால், அவைகளுக்குள் இன்னின்ன வஸ்துக்கள் இருக்கின்றன என்று வாயால் சொல்லி அவற்றைவிட்டு, மற்ற இடங்களைக் காட்டிக் கொண்டே அந்த அம்மாளை மூன்றாவது உப்பரிகைக்கு அழைத்துக் கொண்டு போய், அவ்விடத்தில் இருந்த ஒரு சயனக் கிரகத்தைக் காட்டி, "நீங்கள் இவ்விடத்திலேயே செளகரியமாக இருங்கள். ஒரு வேலைக்காரியை எப்போதும் இங்கேயே இருக்கச் செய்கிறேன். உங்களுக்கு ஆகவேண்டிய