பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 425 காரியங்களை எல்லாம் அவள் செய்வாள்' என்று கூறினான். அந்த அறை அந்த வீட்டின் முன் பாகத்தில் இருந்தது. அறையின் முன் பக்கத்தில் இரண்டு ஜன்னல்கள் இருந்தன. உள் பக்கத்தில், ஊஞ்சல் பலகை, சோபாக்கள், கட்டில், சாய்மான நாற்காலிகள், படங்கள், பூத்தொட்டிகள் முதலியவை நிறைந்திருந்தன. மற்ற இடங்களைப் பார்த்தது போலவே நீலலோசனியம்மாள் அந்த அறைக்குள் நுழைந்து வியப்போடு பார்த்த பின் "எனக்கு இவ்வளவு சொகுசான இடம் எதற்கு? நான் என் சேலைத் தலைப்பை ஒரு மூலையில் விரித்து, அதன் மேல் படுக்கிறவள் தானே இருந்தாலும் பாதகமில்லை. நான் இந்த இடத்திலேயே ஒரு மூலையில் முடங்கியிருந்து இன்றைய பொழுதைப் போக்கு கிறேன். நீங்கள் சீக்கிரமாகப் பூட்டுக்காரனை வரவழைத்துரமாமணி யம்மாளுடைய வீட்டின் கதவைத் திறக்க வழிச் செய்யுங்கள். அங்கேயே போய்விடுகிறேன். ரமாமணியம்மாளுடைய வீடு எந்தத் தெருவில் இருக்கிறது? இவ்விடத்திற்கு அது நிரம்பவும் தூரத்தில் இருக்கிறதோ?" என்றாள். மாசிலாமணி, "இல்லை; இல்லை. அவளுடைய வீடு இதே தெருவில், இந்த விட்டுக்கு நேர் எதிரில் இருக்கிறது. அந்த ஜன்னலின் வழியாகப் பார்த்தால்கூட அது தெரியுமே" என்றான். அதைக் கேட்ட நீலலோசனியம்மாள் "ஒகோ அப்படியா" என்று வியப்போடு கூறிய வண்ணம் ஜன்னலண்டை போய் நின்று வெளியில் பார்த்தாள். எதிர்ப் பக்கத்தில் இருந்த இரண்டு உப்பரிகைகளுடைய அழகான வீடு ஒன்று அவளது திருஷ்டியில் பட்டது. அதைப் பார்த்த நீலலோசனியம்மாள், "இதோ எதிரில் இருக்கும் இரண்டு உப்பரிகை வீடுதான் ரமாமணியம்மாளுடை யதா?" என்றாள். மாசிலாமணி, "ஆம்; அதுதான்" என்றான். நீலலோசனியம்மாள், "அதுவும் அழகாய்த்தான் இருக்கிறது. ஆனால், அதை இந்த வீட்டுக்கு ஈடு சொல்ல முடியாது. ஆனாலும், அதுவும் சிறப்பாகத் தான் கட்டப்பட்டிருக்கிறது. அவர்களும் நல்ல தணிகர்கள் என்று தான் சொன்னார்கள். ஆனால் ரமாமணியம்மாளின் புருஷருக்கு