பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மாயா விநோதப் பரதேசி ஏதாவது உத்தியோகம் உண்டா? அல்லது, அவர் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் பி.ஏ., எம்.ஏ. முதலிய பரீட்சைகளுக்குப் படிக்கிறாரா? அந்த விவரத்தை அவர்களிடம் நான் கேட்க மறந்து விட்டேன்" என்றாள். - மாசிலாமணி சிறிது கிலேசம் அடைந்தவனாய்ப் பேசத் தொடங்கி, "என்ன நீங்கள் அவர்களோடு சென்னையில் இரண்டு மூன்று தினங்கள் இருந்து பழகி இருக்கிறீர்கள். ரமாமணியம்மாளின் கழுத்தையும் முகத்தையும் கவனித்துப் பார்க்கவில்லை போலிருக் கிறதே!" என்றான். நீலலோசனியம்மாள் திடுக்கிட்டு மிகுந்த கிலேசமும் ஒருவித சந்தேகமும் கொண்டு, "ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? நீங்கள் சொல்வது எனக்குத் தெளிவாக விளங்கவில்லையே! என்றாள். மாசிலாமணி, "ரமாமணியம்மாளுடைய புருஷர் இந்த ஊரில் ஒரு பிரபல வக்கீலாக இருந்து சமீப காலத்தில் தான் இறந்து போனார். அவள் இவ்வளவு இளமைப் பருவத்திலேயே கைம் பெண்ணாய் விட்டாள். அவளுடைய கழுத்தில் தாலியும், முகத்தில் மஞ்சளும் இல்லை என்பதை நீங்கள் கவனிக்கவில்லை போலிருக்கிறது" என்றான். அதைக் கேட்ட நீலலோசனியம்மாள் முற்றிலும் திடுக்கிட்டுப் பெருத்த திகைப்படைந்தவளாய் மாசிலாமணியின் பக்கம் திரும்பி, "என்ன என்ன ரமாமணியம்மாள் விதவையா! அவளுடைய புருஷர் இறந்து போய்விட்டாரா! நான் இப்போது கனவு காண்கிறேனா, அல்லது, உண்மையிலேயே உங்களோடு பேசுகிறேனா என்பது தெரியவில்லையே!" என்று அபாரமான பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் காட்டி மறுமொழி கூறினாள். அதைக் கண்ட மாசிலாமணியும் ஒருவாறு திகைத்துப் போய், "ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? நீங்கள் கனவு காண்டதாய் ஏன் சந்தேகிக்க வேண்டும்? நான் சொன்ன சங்கதியில் அப்படிப்பட்ட புதுமையான விஷயம் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லையே!" எனறான. நீலலோசனியம்மாள் தலைசுற்றலும் கிறுகிறுப்பும் அடைந்த வள் போலக் கீழே குனிந்து தனது நெற்றியைக் கையால் அழுத்திக்