பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 127 கொண்டு இரண்டு நிமிஷ நேரம் ஆழ்ந்து யோசனை செய்தபின், "என்ன, நீங்கள் சொன்னது உண்மைதானா? ரமாமணியம் மாளுக்கு இப்போது புருஷர் இல்லையா?" என்று மறுபடியும் அழுத்தமாகக் கேட்டாள். மாசிலாமணி, "என்ன இப்படிக் கேட்கிறீர்களே! அவள் தான் விதவை என்று நான் சொன்னேனே. அவளுக்குப் புருஷர் இல்லையா என்று நீங்கள் மறுபடி கேட்க வேண்டிய அவசியமே இல்லையே. புருஷர் இருந்தால், நான் துணிந்து விதவை என்ற சொல்லை வாயால் உச்சரிப்பேனா?" என்றான். நீலலோசனியம்மாள் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த குழப்பமும் கலக்கமும் கவலையும் கொண்டு, "நீங்கள் சொல் வதைக் கேட்க கேட்க, நான் உங்களிடம் என்ன பேசுவதென்பதே தெரியவில்லை. ரமாமணியம்மாளுடைய புருஷர் சென்னப்பட்ட ணத்தில் அவர்களோடு கூடவே இருக்கிறார். அவருடைய முகத்தில் அக்கினித் திராவகம் கொட்டப்பட்டதனால், அவரும் மற்றவர்களோடு ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறாரே; அப்படி இருக்க, ரமாமணியம்மாள் விதவை என்று நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே" என்றாள். அதைக் கேட்ட மாசிலாமணிக்கு மிகுந்த கோபமும் ஆத்திரமும் பொங்கி எழுந்தன. தான் உண்மையைச் சொல்லும் போது அதை ஏற்றுக் கொள்ளாமல் அவள் தாறுமாறாக உளறுகிறாளே என்ற எண்ணத்தையும் அருவருப்பையும் அவன் அடைந்தவனாய், "என்ன அம்மா! நீங்கள் எதையும் சரியாய் விசாரித்து உண்மையைத் தெரிந்து கொள்ளாமல், நீங்களே ஏதேதோ தப்பாக யூகித்துக் கொண்டு பேசுகிறீர்களே! அக்கினித் திராவகம் கொட்டப்பட்ட தனால் அவஸ்தைப்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பவன் இந்த ஊரில் உள்ள ஒரு தவில்காரன் என்று பத்திரிகையில் வெளியாய் இருக்கிறதே, அதை நீங்கள் படிக்கவில்லையா?" என்றான். நீலலோசனியம்மாள் முற்றிலும் ஸ்தம்பித்து இடிந்து உட்கார்ந்து போய், "ஆ! அப்படியா! அந்த மனிதர் தவில்காரரா? பத்திரிகை களில் இந்த விபரீதச் செய்தி வெளியானதாக எல்லோரும்