பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† 28 - மாயா விநோதப் பரதேசி சொல்லிக் கொண்டார்கள். அதை நான் நேரில் படித்து உள்விவரங் களைத் தெரிந்து கொள்ளவில்லை ஆனாலும், அந்த மனிதன் உண்மையில் தவில்காரன் தானா என்று என் மனம் நம்பிக்கை கொள்ளமாட்டேன் என்கிறது. அவர்களுடைய வரலாற்றை நன்றாகத் தெரிந்து கொள்ளாமல் யாரோ ஒருவர் அந்தச் செய்தியை வெளியிட்டது தானே. ஆகையால், அந்த மனிதரைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பது மாத்திரம் ஒருவேளைதப்பாக இருக்கலாம்" என்றாள். மாசிலாமணி மிகுந்த ஆத்திரமடைந்து, "மற்ற எல்லோரும் ஸ்மரணை தப்பிக் கிடந்ததாகவும், அந்தத் தவில்காரன் மாத்திரம் முன்னால் தெளிவடைந்து தங்களுடைய வரலாற்றை வெளியிட்ட தாகவும் பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. அவனே தன்னைப் பற்றிச் சொன்ன வரலாறுதானே அது? அதைப் பொய் என்று நாம் ஏன் சொல்ல வேண்டும்" என்றான். அதைக் கேட்ட நீலலோசனியம்மாள் உடனே தனது மடி சஞ்சியை அவிழ்த்து அதற்குள்ளிருந்த ஒரு போட்டோப் படத்தை எடுத்து, "இதோ பார்த்தீர்களா? அவர்கள் எல்லோரையும் வைத்து ஆஸ்பத்திரியில் படம் பிடித்தார்கள். ஐந்தாறு படங்கள் எடுக்கப் பட்டன. அதில் நமக்கு ஒரு படம் இருக்கட்டும் என்ற எண்ணத் தினால், நான் அந்தப் படம் பிடித்தவருக்கு ஒரு ரூபாய் கொடுத்து, எனக்கு ஒரு பிரதி கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அப்படியே அவர் மற்றவர்களுக்குத் தெரியாமல், இதை எடுத்துக் கொடுத்தார். இதைப் பாருங்கள். இதில் அந்த மனிதர் இருக்கிறார். அவர் உண்மையில் யார் என்று பாருங்கள்" என்றாள். அவள் கூறியதைக் கேட்ட வண்ணம் மாசிலாமணி மிகுந்த ஆவ லோடு அந்தப் படத்தை வாங்கி அதற்குள் இருந்த வடிவங்களை உற்று நோக்கினான். எல்லோரும் அங்கஹனம் அடைந்து படுத் திருந்த காட்சி பரமவிகாரமான காட்சியாக இருந்தது. முக்கியமாக அவன் ரமாமணியம்மாளது முகத்தையே நன்றாகக் கூர்ந்து நோக் கினான். அவளது முகம் பிரம்மாண்டமாக வீங்கியிருந்ததோடு, பெருத்த துணிக்கட்டு போடப்பெற்றும் இருந்தது. அதைக் காண,