பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 129 மாசிலாமணியின் மனத்தில் சகிக்க ஒண்ணாத அருவருப்பும் வேதனையும் உண்டாயின. அதன் பிறகு அவன் மற்றவரது வடிவங்களையும் பார்த்து, "ஆகா! இவன் நம்முடைய ஊரில் உள்ள கும்பேசுவரர் கோவில் மேள ஜதையைச் சேர்ந்த தவில்கார னல்லவா. இவன் எதற்காக அவர்களோடு கூடவே பட்டணம் போனான் என்பதும், முக்கியமாய், வெள்ளிக்கிழமை இரவில் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த மனிதர் வீட்டுக் கலியாணத்திற்குப் போன இடத்திற்கு அவர்களோடு இவனும் எதற்காகப் போனான் என்பதும் தெரியவில்லையே!" என்று பெருத்த வியப்பும் திகைப்பும் கொண்டு கூறினான். நீலலோசனியம்மாள், "நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள். உண்மையில் அந்த மனிதன் இந்த ஊர்த் தவில்காரன்தானா?" என்றாள். மாசிலாமணி, "சந்தேகமே இல்லை. இவன் தவில் அடித்துக் கொண்டு இதே தெருவழியாகப் போனதை நான் ஆயிரம் தடவை பார்த்திருக்கிறேன்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான். நீலலோசனியம்மாள், "அப்படியா ஆகா! அவர்கள் நடந்து கொண்ட மாதிரியைக் கண்டும், அவர்கள் சொன்னதைக் கேட்டும் அநியாயமாய் நான் மோசம் போய்விட்டேனே! அடெ பாவிகளா! பரம சாதுக்கள் போலவும் மகா யோக்கியர்கள் போலவும் நடந்து கொண்டு என் தலையில் நன்றாக மிளகாய் அரைத்து விட்டீர்களே! ஐயோ என் வயிறு பற்றி எரிகிறதே! ஏதோ அக்கிரமம் செய்து இப்படி மூளியாய் இருக்கும் அவர்கள், மேலும் பெருத்த அக்கிரமத்தில் இறங்கி என்னைப் படுகுழியில் இறக்கி விட்டார்களே! அவர்களுக்கு நல்லகதி கிடைக்குமா? அவர்கள் கண் தெரிந்து வழி நடப்பார்களா? என்னுடைய காலைச் சுற்றிய சனியனா சிதம்பரம் ஸ்டேஷனில் என்னைக் கொண்டு போய் அவர்களுடைய வண்டியில் ஏற்றிவிட்டது. ரயில் வண்டிக்குள் தாயும் தகப்பனும் வழியில் உட்கார்ந்து கொண்டு வேறே யாரையும் உள்ளே விடாமல் காவல் காத்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்லுவேன் ரமாமணியம்மாளும் அந்தத் தவில்காரப் பையனும் அப்போது தனியாகவும் மறைவாகவும் இருந்த ஒரு சோபாவில் உட்கார்ந்து இரவு முழுதும் அடித்த மா.வி.ப.it1-9