பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 - மாயா விநோதப் பரதேசி கொட்டத்தை நான் என்னவென்று சொல்லுவேன். அந்தப் பரம விகாரமான காட்சியைப் பார்ப்பதற்கே சகிக்கவில்லை. அப்போதே என் மனசில் ஒருவித சந்தேகம் உதித்தது. அவர்கள் புருஷன் பெண்சாதியாக இருந்தால், ரயிலில் அப்படிப்பட்ட மானங்கெட்ட காரியத்தில் இறங்க மாட்டார்களே என்ற எண்ணம் உண்டாயிற்று. அவர்கள் இருந்த பக்கம் என் முகத்தைத் திருப்பவே எனக்குக் கூசியது. நான் அவளுடைய தாயாருடன் பேசிய காலத்தில் தன்னுடைய பெண்ணும் மருமகப் பிள்ளையும் தனியாய் இருப்பதாகச் சொன்னது என் காதில் இப்போதும் ஒலிப்பது போல இருக்கிறதே. அதன் பிறகு அவர்களுடன் நான் சத்திரத்தில் இருந்த காலத்திலும் அவர்கள் விகாரமாகத்தான் நடந்து கொண்டனர். ஆனால், என் மனசில் இன்னொரு சந்தேகம் உதித்தது. அந்த இடும்பன் சேர்வைகாரன், போயி ஆகிய இருவருக்கும் முன்னால், அந்தப் பக்கிரியா பிள்ளையை அவர்கள் அன்னியன் போல நடத்தியதாகவும், அவர்கள் இல்லாத காலங்களில் அவனுடன் அந்தரங்கமான வாஞ்சையோடு நடந்து கொண்டதாகவும் என் மனதில் பட்டது. நான் அப்படி நினைப்பது சரியல்ல என்று என் மனசை நான் கண்டித்து அடக்கிக் கொண்டேன். ஆகா! அவர்கள் எப்பேர்ப்பட்ட அட்டுழியம் செய்திருக்கிறார்கள்! அந்தத் தவில்காரப் பையனுக்கும் அவளுக்கும் எவ்வளவு காலப் பழக்கமோ அது இப்போது சந்தி சிரிக்கும்படி ஆய்விட்டது. ஊர் கெட்ட கேட்டை என்னவென்று சொல்வது! அவர்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன என்று நினைத்து இதை விட்டு விடுவதற்கும் இல்லை. அவர்கள் என்னை அடியோடு படுகுழியில் இறக்கி இருக்கிறார்கள்" என்றாள். அவள் சொன்ன வரலாற்றைக் கேட்ட மாசிலாமணி உண்மையி லேயே பைத்திய வெறி கொண்டவன் போலானான். ரமாமணி தன்னை ஒருவனையன்றி வேறே எவனையும் கண்ணெடுத்தும் பாராமல் உறுதியாக இருந்து வருகிறாள் என்று அதுகாறும் நினைத்து வந்தவனாதலால், கேவலம் ஒரு தவில்காரப் பையனை அவள் அந்தரங்க ஆசை நாயகனாய் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கேட்கவே, பெரும்புயலில் அகப்பட்ட கடலின்