பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 134 அலைகள் போல, அவனது இரத்தம் கொதித்துக் கொந்தளித் தெழுந்து கட்டிலடங்காமல் மோதத் தலைப்பட்டது. அவனது கண்கள் கோவைக் கனி போலச் சிவந்து தீப்பொறி கக்கின. கை கால்கள் எல்லாம் தடதடவென்று ஆடுகின்றன. உடம்பு தாறுமாறாக முறுக்கிக் கொள்கின்றன. அவனது மனம் கட்டிலடங் காத கொதிப்பும், கலக்கமும், கடுங்கோபமும், வீராவேசமும் கொண்டு அமித கதியாகப் பறக்கிறது. கால் நாழிகை காலம் வரையில் தான் என்ன பேசுவதென்பதையாவது, என்ன செய்வ தென்பதையாவது அறியாதவனாய் அப்படியே ஸ்தம்பித்து நின்றவனாய், "ஆகா ஆச்சரியம்! நீங்கள் சொல்லும் வரலாறு ஏதோ புஸ்தகத்தில் உள்ள கதையின் வரலாறு போலத் தோன்று கிறதே யன்றி உண்மை என்றே என் மனம் நம்பமாட்டேன் என்கிறதே ரமாமணியும் இப்படி நடப்பாளா! அவர்களோடு நான் வெகுகாலமாக நெருங்கிப் பழகுகிறவனாயிற்றே. அவள் மகா சுத்த மான நடத்தையுள்ளவளாக நடந்து வந்தாளே. நீங்கள் சொல்வது அத்யாச்சரியகரமான விஷயமாக இருக்கிறதே. உங்களை அவர்கள் படுகுழியில் இறக்கிவிட்டதாகச் சொன்னிகளே. அது என்ன விஷயம்? அதையும் சொல்லுங்கள்" என்றான். உடனே நீலலோசனியம்மாள் சித்தப்பிரமை கொண்டு கலங்கித் தவித்து நிரம்பவும் பரிதாபகரமாகத் தனது கைகளைப் பிசைந்து கொண்டு, "ஐயா! அந்தப் படுமோசத்தை என்னவென்று சொல்லுவேன்! இப்போது என் வாய் என்ன சொல்கிறதென்பதே என் மனசிற்குத் தெரியவில்லை. என் மனம் அவ்வளவு தூரம் கலங்கிக் கலவரமடைந்து தத்தளித்து நிற்கிறது. அந்த விவரத்தை நான் வாயால் சொல்வதற்கு முற்றிலும் அசக்தமானவளாய் இருக்கி றேன். இதோ என்னிடம் ஒரு தஸ்தாவேஜி இருக்கிறது. இதை நான் உங்களிடம் கொடுக்கிறேன். இதைப் படித்து உண்மையை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பத்திரத்தைப் பற்றிய வரலாறு எதையும் உங்களிடம் நான் வெளியிட வேண்டாம் என்றும், அப்படிச் செய்தால் நீங்கள் பொறாமைப் படுவீர்கள் என்றும் சொல்லி அவர்கள் என்னை எச்சரித்தது இதற்குத் தான் போலிருக்கிறது. ஆகாகா அவர்கள் என்னிடம் எவ்வளவு கபடமா கவும் வஞ்சகமாகவும் நடந்து கொண்டிருக்கிறார்கள்' என்று கூறிய