பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 133 உத்தமி போல நடந்து உள்ளுற இவ்விதமான துர்நடத்தையில் இறங்கி இருக்கிறாள். அவர்கள் இப்படிக் கெட்டுப் போனதைப் பற்றி என் மனம் வருந்தித் தவிக்கிறதே அன்றி, அதனால் எனக்கு யாதொரு நஷ்டமாவது தலைகுனிவாவது இல்லை. எந்த ஊரில் இருந்தோ வந்த நீங்கள் உங்களுடைய பெருத்த சொத்தை இப்படிப்பட்ட அயோக்கியர்கள் பேரில் எழுதி வைத்துவிட்டு, அவர்களுடைய சவரக்ஷணையில் இருக்க உத்தேசிக்கிறீர்களே என்ற விஷயந்தான் இப்போது என் மனதை நிரம்பவும் வதைக்கிறது" என்றான். நீலலோசனியம்மாள், "வெளிப்பகட்டைக் கண்டு நான் வகை மோசம் போய்விட்டேன். ஐயா! இப்படிப்பட்ட துன்மார்க்க நடத்தை உள்ளவர்கள் வீட்டில் நாய்கூடத் தண்ணர் குடிக்காது. உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் நான் அவர்களிடம் இரண்டொரு வேளை போஜனம் கூடச் செய்து விட்டேன். என் உடம்பை நெருப்பில் போட்டு சுட்டெரித்தாலன்றி அந்த அசுதி இனி தீராது. இது வரையில் தெரியாத்தனத்தினால் செய்ததே எனக்கு ஏமுேழு ஜென்மத்திற்கும் போதுமே. அப்படி இருக்க, இனி ஒரு நிமிஷமும் நான் அவர்களுடைய சவரகூடிணையில் இருப்பேனா? அல்லது, இனி நான் அவர்களுடைய முகத்தில் தான் விழிப்பேனா? அது ஒருநாளும் இல்லை. ஏற்கனவே தீர்மானித்துக் கொண்டபடி நான் இந்த ஊரில் தான் இருக்கப் போகிறேன். நான் இந்தப் பத்திரத்தை உடனே ரத்து செய்து, என் சொத்து முழுதையும் இந்த ஊரில் உள்ள கும்பேசுவர சுவாமிக்கு எழுதி வைத்து விடுகிறேன். அந்தச் சொத்தைப் பரிபாலித்து, அந்தத் தர்மத்தை எப்போதும் நடத்தி வருவதற்கு உங்களைப் போன்ற தக்க பெரிய மனிதர் யாரையாவது தர்மகர்த்தாவாக நியமித்து விட லாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? அந்தத் தர்மத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?" என்றாள். மாசிலாமணி சிறிது சிந்தனை செய்பவன் போல இருந்து "ஆகா! நாம் சொந்தத்தில் இவ்வளவு அபாரமான சொத்துகளைச் செலவழித்து தர்மம் செய்யாவிட்டாலும், வேறொருவர் ஒப்படைப்பதை வைத்து நடத்துவது கூடவா ஒரு பிரயாசை?