பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மாயா விநோதப் பரதேசி நானும் கோவில்களுக்கு ஏராளமான சொத்துக்களைத் தர்மத்திற்காக விட உத்தேசித்திருக்கிறேன். அதோடு உங்களுடையதையும் சேர்த்து, நிரம்பவும் வைபவமாக ஏதாவது முக்கியமான சில உற்சவங்களை உங்கள் பேரால் நடத்த ஏற்பாடு செய்கிறேன்" என்றான். உடனே நீலலோசனியம்மாள் சிறிது நேரம் யோசனை செய்து, "சரி, அப்படியே செய்துவிடுவோம். ஆனால், இந்த விஷயத்தில், எனக்கு நீங்கள் ஒர் உதவி செய்ய வேண்டும். உங்களுடைய தமையனார் இந்த ஊரில் பிரபலமான வக்கீலாக இருந்த்ார்கள் என்று சொன்னிகளே. உங்கள் தமையனாருக்குப் பழக்கமான கெட்டிக்கார வக்கீல் பட்டணத்தில் யாராவது இருக்கிறார்களா? அவர்கள் யாரிடமாவது உங்களுக்குப் பரிச்சயமுண்டா?" என்றாள். உடனே மாசிலாமணி மகிழ்ச்சியோடு புன்னகை செய்து, "பட்டணத்தில் உள்ள எல்லா வக்கீல்களும் எங்களுக்குத் தெரிந்த வர்களே. முக்கியமாக எங்கள் பந்து ஒருவர் மயிலாப்பூரில் இருக்கிறார். பாரிஸ்டர் சிவசிதம்பரம் பிள்ளை என்றால், நார்டன் துரைக்குக்கூட கொஞ்சம் யோசனைதான். என் தமயனார் ஏதாவது பெரிய வியாஜ்ஜியங்களில் யோசனை கேட்க வேண்டுமானாலும், அந்த பாரிஸ்டர் உதவியையே நாடுவார். அவருடைய கட்சிக்கு எப்போதும் ஜெயந்தான் கிடைக்கும். அவரிடமே நீங்கள் போகலாம். உங்களுக்கு அவரால் என்ன காரியம் ஆக வேண் டுமோ, அதைச் சொன்னால், நான் உடனே கடிதம் எழுதித் தருகி றேன்" என்றான். நீலலோசனியம்மாள், "இந்தப் பத்திரத்தைப் பட்டணத்தில் எனக்கு ஒரு வக்கீலே எழுதிக் கொடுத்தார். நாங்கள் ஐந்து பேர் சேர்ந்து உடன்படிக்கை போல இதை எழுதிக் கொண்டிருக்கிறோம். நான் மாத்திரம் சுதாவாக இதை ரத்து செய்துவிட எனக்கு அதிகாரம் உண்டா, அல்லது, மற்றவர்களுக்குத் தெரிவித்து விட்டோ, அல்லது, அவர்களுடைய சம்மதியைப் பெற்றோ, இதை ரத்து செய்ய வேண்டுமோ என்ற விஷயங்கள் எனக்குச் சட்டபூர்வமாக நிச்சயமாய்த் தெரிய வேண்டும். அவர் வேறொரு புதுப்பத்திரம்