பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 135 தயார் செய்ய வேண்டும். அது இந்தப் பத்திரத்தை ரத்து செய்வதோடு, என் சொத்துக்களை கும்பேசுவர சுவாமிக்கு எழுதி வைத்து, உங்களையும் உங்கள் சந்ததியாரையும் சாசுவதமான தர்மகர்த்தாக்களாய் நியமிக்க வேண்டும். அப்படி எழுதும் புதிய பத்திரம் எவ்விதச் சிக்கலுமின்றி ஆணித்தரமாக இருக்க வேண்டும். சொத்து பெரிய சொத்தாகையால், அரைவாயன் கால்வாயன் எல்லாம் அதை எழுதினால், பிந்தி ஏதாவது கெடுதல் நேரும். நாம் செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டும். அதனால் நூறு இருநூறு பணச்செலவு ஆனாலும் பரவாயில்லை. அந்தப் பத்திரம் எழுதுவதோடு, எங்கள் ஊரில் உள்ள செட்டியாருக்கு அவர் ஒரு கடிதம் எழுதி பணத்தை உடனே வருவித்து உங்களிடம் ஒப்படைக்கும்படி செய்ய வேண்டும். இந்த வேலைகளை நிரம்பவும் திறமையாக அந்த வக்கீல் செய்வார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், அவருக்கு நீங்கள் உடனே ஒரு கைக்கடிதம் எழுதிக் கொடுங்கள். நான் இன்றைய இராத்திரி வண்டியிலேயே புறப்பட்டுப் பட்டணம் போய் நாளைய தினமே இந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பி வந்து சேருகிறேன். நான் தர்மத்திற்காக நியமிக்க உத்தேசித்திருக்கும் என் சொத்து அந்த பஞ்சமா பாதகர்களின் பேரில் இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் நான் கும்பேசுவர சுவாமிக்குப் பெருத்த அபராதியாய் இருந்து வருவது போன்ற ஓர் உணர்ச்சி என் மனசில் தோன்றி என்னை - நரக வேதனைக்கு உள்ளாக்கும் என்பதே நிச்சயம். ஆகையால், இந்த ஊரில் நான் தலைசாய்த்துப் படுக்கக்கூட என் மனம் இடந்தர வில்லை. தயவு செய்து நீங்கள் ஒரு கடிதம் எழுதிக் கொடுங்கள். நான் அறியாத பெண் பிள்ளை; அவர் பெரிய பாரிஸ்டர். அவர் கேட்பதற்குச் சரியான உத்தரம் சொல்லமாட்டாமல் நான் விழிக்க நேரும். ஆகையால், நான் இந்த வழக்கைப் பற்றி அவரிடம் என்னென்ன சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் சுருக்கமாக அவருக்கெழுதும் கடிதத்தில் நீங்களே எழுதிக் கொடுங்கள்" என்றாள். х அதைக் கேட்ட மாசிலாமணி, "சரி, எழுதிக் கொடுக்கிறேன்; வாருங்கள், என்னுடைய அறைக்குப் போவோம்" என்றான்.