பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மாயா விநோதப் பரதேசி உடனே அவர்கள் இருக்கும் மூன்றாவது உப்பரிகையை விட்டுக் கீழே இறங்கி மாசிலாமணியின் அறைக்குச் சென்றனர். அவ்விடத்தில் மேஜையின் மேல் காகிதம், எழுதுகோல், உறை முதலியவைகள் ஏராளமாக இருந்தன. அவன் அவ்விடத்தில் உட்கார்ந்து மயிலாப்பூரில் உள்ள பாரிஸ்டர் சிவசிதம்பரம் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதி, அதை நீலலோசனியம்மாளுக்குப் படித்துக் காட்டிய பின் மேல் விலாசமும் எழுதி உறைக்குள் காகிதத்தைப் போட்டு ஒட்டி அதை அந்த அம்மாளிடம் கொடுத்தான். அவள் நிரம்பவும் வணக்கமாகவும் விநயத்தோடும் அதை வாங்கித் தனது மடிசஞ்சிக்குள் வைத்து கட்டிக் கொண்ட பின், "சரி, நான் இன்று இரவு வண்டியிலேயே பட்டணம் போய் இந்த வேலையை இரண்டொரு தினங்களில் முடித்துக் கொண்டு வந்து சேருகிறேன். அவ்விடத்தில் போலீசார் என்னைப் பார்க்காத படி நர்ன் மறைவாக இருந்தே எல்லாக் காரியங்களையும் முடித்துக் கொண்டு வந்து சேருகிறேன். நான் எப்படியும் அந்த இடும்பன் சேர்வைகாரரைக் காப்பாற்றியே தீரவேண்டும். எனக்கு உத்தரவு கொடுங்கள். ராமசாமி கோவில் பிராகாரத்தில் இராமாயணம் முழுதையும் சித்திரமாகவே எழுதி இருக்கிறார்களாம். அது அழகாய் இருக்கிறதாம். அதைப் பார்க்க வேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது. அதையும் இன்னும் மகா மகக்குளம் முதலிய வேறு சில முக்கியமான இடங்களையும் பார்த்துக் கொண்டே இருந்தால், அதற்குள் அந்தி நேரம் வந்துவிடும். உடனே ரயிலுக்குப் போய்விடுகிறேன்" என்றாள். அப்படியே செய்யும்படி மாசிலாமணி கூற, உடனே நீல லோசனியம்மாள் அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டு ராமசாமி கோவிலை நோக்கிப் போய்விட்டாள். ★ 女 ★ மறுநாட்காலை சுமார் பத்துமணி நேரமிருக்கலாம். சென்னை ஆஸ்பத்திரியில் தனியான ஒரு கூடத்தில் விடப்பட்டிருந்த ரமாமணியம்மாள் முதலிய ஐவருக்கும் அன்றைய பகல் போஜனம் நிறைவேறியது. எல்லோரும் தலையணை திண்டு