பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 137 களில் சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு அங்கஹனப்பட்ட பிறகு ஏழு தினங்கள் ஆயின. ஆதலால், ரமாமணியம்மாளது முகத்தின் வீக்கம் வடிந்து போயிருந்தது. அறுபட்ட இடத்தின் ரணமும் அநேகமாய் ஆறிப் போனதாகக் காணப்பட்டது. அவள் தனது வாயைத் திறந்து சாதாரணமாய்ப் பேசக்கூடிய நிலைமைக்கு வந்திருந்தாள். மற்றவர்களது ரணங்களும் அநேகமாய் ஆறிப்போயிருந்தன. அவர்கள் ஒருவரோடு ஒருவர் அதிகமாய்ச் பேச்சுக் கொடுத்து உடம்பை அலட்டிக் கொள்ளக் கூடாதென்று டாக்டர்கள் கண்டித்துக் கூறியிருந்தனர். ஆதலாலும், அடிக்கடி பணிமக்கள் வந்து வந்து போய்க் கொண்டிருந்தமையாலும், அவர்கள் தபசிகள் போல இரவு பகல் எப்போதும் மெளனமாகவே இருந்து வந்தனர். அவர்கள் ஒருவரிடத்தொருவர் வெளியிட்டுக் கொள்வதற்கும், கலந்து யோசனை செய்வதற்கும் அவர்களது மனத்தில் ஏராளமான விஷயங்கள் இருந்தன. ஆனாலும், அவ்விடத்துக் கட்டுப்பாட்டை மீற மாட்டாதவர்களாய்த் தவித்துத் தமது பொழுதை நிரம்பவும் பாடுபட்டுக் கழித்துக் கொண்டிருந்தனர்; அதுவுமன்றி, தங்கள் வேலைக்காரனான போயியும் அதே கூடத்தில் ஒரு கட்டிலில் படுக்கவைக்கப்பட்டிருந்தமையால், அவனுக்கருகில் இருந்து தமது ரகசியங்களை எல்லாம் பேசுவதற்கும் அவர்களது மனம் இடந்தரவில்லை. ஆகவே, அவர்கள் அப்போதைக் கப்போது பூடகமான சொற்களையும், கைஜாடை கண்ஜாடை முதலிய வற்றையும் உபயோகித்து ஒருவரோடொருவர் சம்பாஷித்து வந்தனர். அந்த ஐவருள் முக்கியமாக ரமாமணியம்மாளே தலை போல இருந்து வந்தாள் ஆதலால், எல்லா விஷயங்களிலும் அபிப்பிராயங்களையும் உத்தரவுகளையும் அவளே பிறப்பித்து வந்தாள். நாம் மேலே கூறியபடி அவர்கள் வியாழக்கிழமை காலை பத்துமணிக்குத் தமது போஜனத்தை முடித்துக் கொண்டு உட்கார்ந் திருந்த காலத்தில், ரமாமணியம்மாள் தனது பெற்றோரை நோக்கி மெதுவாகப் பேசத் தொடங்கி, "இந்த நீலலோசனியம்மாளை நாம் அதிக நாள் மாசிலாமணியிடம் விட்டிருப்பது உசிதமாகத் தோன்ற வில்லை. பத்திரத்தில் கண்ட விஷயங்களை அவன் தெரிந்து கொள் வதில் கெடுதல் ஒன்றுமில்லை. பத்திரத்தை அவன் பார்த்தால்,