பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 139 கலக்கத்தையும், பலவகையான சந்தேகங்களையும் உண்டாக்கி விட்டன. தாங்கள் நீலலோசனியம்மாளை அதிக காலம் உயிரோடிருக்க விடக்கூடாது என்று அப்போதே ரமாமணியம் மாள் ஜாடையாகக் கூறியதை ஒருகால் அந்த ஸ்திரீ அறிந்து கொண்டிருப்பாளோ என்ற திகிலும் நடுக்கமும் எல்லோருக்கும் ஏககாலத்தில் தோன்றின. அதுவுமன்றி, கும்பகோணத்திலேயே இருப்பதற்காகப் போனவள் மறுதினமே திரும்பிப் பட்டணம் வந்து விட்டதன் காரணம் எதுவாக இருக்கும் என்ற பீதியே முக்கியமாக எழுந்து அவர்களது மனத்தைக் குழப்பிக் கலக்கின. ஒருவேளை போலீசார் அவளைத் தடுத்து அழைத்துக் கொண்டு வந்திருப்பார்களோ என்ற நினைவே முக்கியமாக அவர்களது மனதில் தோன்றித் தோன்றி மறைந்தது. அவ்வாறு அவர்கள் திகிலடைந்து பலவித எண்ணங்களைக் கொண்டு குழப்பமுற்றிருந்த நிலைமையில் நீலலோசனியம்மாள் நிச்சலனமான முகத்தோற்றத் தோடு உள்ளே நுழைந்து மற்ற எவர் பக்கமும் தனது முகத்தைத் திருப்பாமல் நேராக ரமாமணியம்மாளண்டை போய், "அம்மா! ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்து நான் உன்னோடு தனியாகப் பேச வேண்டும். உங்கள் போயிக்கு அந்தச் சங்கதி தெரியக் கூடாது. எழுந்து ஐந்து நிமிஷ நேரம் வெளித் தாழ்வாரத்திற்கு வா" எனறாள. அதைக் கேட்ட ரமாமணியம்மாள் இன்னதென்று விவரிக்க இயலாத பெருத்த மனவேதனையும், குலைநடுக்கமும் அடைந்தாள். அவளது கைகளும், கால்களும், உடம்பும் வெட வெடவென்று நடுங்க ஆரம்பித்தன. மனம் கட்டிலடங்காமல் தவித்தது. "இவள் குறிக்கும் முக்கியமான விஷயம் எதுவாக இருக்கும்? இவளுடைய முகத்தோற்றத்தையும், இவள் பேசும் மாதிரியையும் பார்த்தால் இவள் நம்மிடம் வைத்திருந்த நம்பிக்கையும், மதிப்பும், பிரியமும் அப்படியே இருப்பதாகவே தோன்றுகின்றன. அது போலீசாரைப் பற்றிய விஷயமாகத் தான் இருக்க வேண்டும். எழுந்து போய், இவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்டறியலாம்" என்று ரமாமணியம்மாள் தனக்குத் தானே எண்ணித் தீர்மானித்துக் கொண்டவளாய்