பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 14: அந்த அறைக்குள் நுழைந்தவுடனே நீலலோசனியம்மாள், "இந்த ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் நோயாளிகளைப் பார்க்க வருவோர் உட்கார்ந்து கொண்டிருப்பதற்காக இந்த அறை ஏற்படுத்தப் பட்டிருக்கும் போலிருக்கிறது. நாம் இந்தப் பலகையின் மேல் உட்கார்ந்து பேசுவோம் வா. இப்படி உட்கார்ந்துகொள்" என்று கூறிய வண்ணம் வாசற்கதவை மூடி வைத்துவிட்டு வந்து பலகையின் நடுவில் உட்கார்ந்து கொண்டு, தனக்குப் பக்கமாய் உட்கார்ந்து கொள்ளும்படி ரமாமணியம்மாளை அழைக்க, அவள் அப்படியே வந்து உட்கார்ந்து கொண்டாள். அதற்குள் ரமாமணியம்மாளின் மனம் சிறிது துணிவையும் தனது இயற்கை நிலைமையையும் அடைந்திருந்தது ஆகையால் அவள் மற்றவளை நோக்கி, "நீங்கள் கும்பகோணத்திற்கே போக வில்லையா என்ன? போலீசார் உங்களைத் தடுத்து விட்டார்களா" என்றாள். - நீலலோசனியம்மாள், "இல்லையம்மா! நான் போலீசாருடைய கண்ணில் படவே இல்லை. அன்றைய தினம் இரவு வண்டியி லேயே புறப்பட்டு நான் கும்பகோணம் போய் நேற்று மத்தியானம் மாசிலாமணிப் பிள்ளையினுடைய வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்து உன் கடிதத்தையும் அவரிடம் கொடுத்தேன். அவர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, என்னை நிரம்பவும் மரியாதையாக நடத்தி உபசரித்து அவருடைய வீட்டின் மூன்றாவது கட்டிலுள்ள ஒர் அறையை எனக்குக் காட்டி அங்கே என்னை இருக்கச் செய்தார். நாங்கள் இருவரும் அங்கே போனவுடன் உன்னைப் பற்றி ஏதோ பிரஸ்தாபம் வந்தபோது, உன் புருஷர் இறந்து போய் விட்டதாகவும், நீ இப்போது விதவை என்றும் அவர் சொன்னார். அதைக் கேட்டவுடன், நான் கனவு தான் காண்கிறேனோ என்று என் மனம் பிரமித்துப் போய்விட்டது. நான் உடனே அவர் சொன்னதை மறுத்துப் பேசி, "ரமாமணியம் மாளின் புருஷர் அவளோடு பட்டணம் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறாரே அவளை விதவை என்று சொல்லுகிறீர்களே" என்றேன். அவர் உடனே சிரித்து என்னைப் புரளி செய்ததோடு, நீ உண்மையில் விதவை என்றே அவர் உறுதியாகச் சொன்னார்.