பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i42 மாயா விநோதப் பரதேசி அதைக் கேட்டவுடன் எனக்கு நிரம்பவும் விசனமும் கவலையும் உண்டாகி விட்டன. அவர் சொன்னதற்கும் நீங்கள் என்னிடம் சொன்னதற்கும் ஒன்றுக்கொன்று முற்றிலும் விரோதமாக இருந்தது ஆகையால், நான் என்னிடமிருந்து நம்முடைய உடன்படிக்கைப் பத்திரத்தை எடுத்து அவரிடம் காட்டினேன்" என்றாள். அதைக் கேட்ட ரமாமணியம்மாளுக்கு இடி விழுந்தது போல ஆய்விட்டது. "ஆகா! மோசம் வந்துவிட்டதே! பக்கிரியா பிள்ளையின் விஷயம் மாசிலாமணிக்குத் தெரிந்து போய் விட்டதே' என்ற பெருத்த திகிலும், கலவரமும், குலை நடுக்கமும் எழுந்து அவளைக் கப்பிக்கொண்டன. அவளது முகம் உடனே மாறி விகாரப்பட்டுப் போய்விட்டது. ஆயினும் தான் ஏதாவது தந்திரம் செய்து, அந்த விபரீதமான நிலைமையிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டவளாய் உடனே ஆத்திரமாகப் பேசத்தொடங்கி, "ஆமம்மா! அவர் சொன்னது நிஜமான சங்கதி தானே, அதைக் கேட்டு நீங்கள் பிரமிப் படைய வேண்டிய காரணம் என்ன? நாங்கள் சொன்னதற்கும், அவர் சொன்னதற்கும் என்ன விரோதமிருக்கிறது? என் புருஷர் இந்த ஆஸ்பத்திரியில் படுத்திருப்பதாக உங்களுக்கு யார் சொன்னது?" என்று துணிவாகக் கூறினாள். அதைக் கேட்ட நீலலோசனியம்மாள் அப்படியே ஸ்தம்பித்துப் போய், "என்ன அம்மா! என்னை நீங்கள் பைத்தியக்காரி ஆக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே. உன் தாயார், இந்தப் பக்கிரியா பிள்ளை தங்களுடைய மருமகப்பிள்ளை என்று உனக்கெதிரில் தானே சொன்னாள். அதுவுமில்லாமல் நாம் எழுதி ரிஜிஸ்டர் செய்த பத்திரத்தில் பக்கிரியா பிள்ளை உன்னுடைய புருஷரென்று எழுதியிருக்கிறோமே. அதை சப் ரிஜிஸ்டிரார் உங்களுக்குப் படித்துக் காட்டித்தானே ரிஜிஸ்டர் செய்தார். அப்போது அதை நீங்கள் ஒப்புக் கொண்டிருந்தீர்களே' என்றாள். உடனே ரமாமணியம்மாள் மிகுந்த கோபமும் சிடு சிடுப்பும் காட்டி, "என்ன அம்மா? பைத்தியம் போல உளறுகிறீர்களே! இந்தப் பக்கிரியா பிள்ளை என்தகப்பனாருடைய தமக்கை குமாரர். அவருக்கு என் தகப்பனார் அம்மான். ஆனால், என்