பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 143 தகப்பனாருக்கு அவர் மருமகன் தானே. அவரை என் தாயாரும் அதே முறைமைப்படி தானே குறிக்க வேண்டும். அவர்கள் ஒன்று சொன்னால் நீங்கள் அதை விபரீதமாக அர்த்தம் செய்து கொண்டு அதே மாதிரி பத்திரத்திலும் எழுதி விட்டீர்கள் போலிருக்கிறதே. எங்களுக்கு முன் சப் ரிஜிஸ்டிரார் அந்தப் பத்திரத்தைப் படித்தது உண்மை ஆனாலும், எங்களுடைய தேக அவஸ்தையினால், நாங்கள் அதை அவ்வளவாகக் கவனித்துக் கேட்கவே இல்லை. நீங்கள் எழுதியிருப்பது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒன்றையே நாங்கள் உறுதியாக வைத்திருந்தோம் ஆகையால், உறவு முறைமை முதலிய சில்லரை விஷயங்களை எல்லாம் நாங்கள் கவனித்துக் கேட்கவே இல்லை. நீங்கள் ஏதோ தாறுமாறாக எழுதி வைத்து எனக்கு இப்படிப்பட்ட தலை குனிவை உண்டாக்கி விட்டீர்களே. இது உங்களுக்கு நியாயந்தானா?" என்றாள். அதைக் கேட்ட நீலலோசனியம்மாள் நிரம்பவும் தத்தளித்தவ ளாய், "அடடா, அப்படியா சங்கதி ஆகா! நான் பெருத்த தவறை அல்லவா செய்து விட்டேன்! இருந்தாலும் பாதகமில்லையம்மா! நான் செய்த தவறை நான் திருத்தி, மாசிலாமணிப் பிள்ளை முதலியோர் உன்னைப் பற்றி வித்தியாசமான எண்ணம் கொள்ளாதபடி நான் செய்கிறேன். நீ என்மேல் கோபித்துக் கொள்ள வேண்டாம். இந்தப் பக்கிரியா பிள்ளை கும்பேசுவரன் கோவிலில் தவில் அடிக்கும் உத்தியோகம் பார்ப்பவர் என்று மாசிலாமணிப் பிள்ளை என்னிடம் சொன்னார். அதன் பிறகு நான் இங்கே வந்து சமாசாரப் பத்திரிகை ஒன்றை வாங்கிப் படித்துப் பார்த்தேன். அதிலும், அவர் தவில்காரர் என்று கண்டிருக்கிறது. அவர் உன்னுடைய அத்தை மகன் என்று நீயே இப்போது ஒப்புக் கொண்டாய் ஆகவே, நீங்கள் மேளக்கார ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது பரிஷ்காரமாகத் தெரிகிறது. நான் உயர்வான வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவள். நான் உங்களுடைய சவரகூடிணையில் இருப்பது கூடாத காரியம். ஆகவே, நான் ஒரு வக்கீலைக் கொண்டு வேறே ஒரு பத்திரம் தயார் செய்து, அதன் மூலமாய் நம்முடைய ஒப்பந்தப் பத்திரத்தை ரத்து செய்து, என்னுடைய