பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 445 இருக்கிறது. அதை நான் தருகிறேன். இதை நீ பிரித்துப் படித்துப் பார். உன்னையும் பக்கிரியா பிள்ளையையும் பற்றி அவர் ஏதாவது அவதூறாக எழுதி இருந்தால், அந்தப் பாகத்தை மாத்திரம் நான் அடித்து விட்டு, மறுபடி கடிதத்தை வேறே உறையில் போட்டு வக்கீலிடம் கொண்டு போய்க் கொடுக்கிறேன்" என்று கூறிய வண்ணம் தனது மடிசஞ்சியை அவிழ்த்து அதற்குள் இருந்த கடிதத்தை எடுத்து அதன் உறையைக் கிழித்து உள்ளே இருந்த கடிதத்தை எடுத்து ரமாமணியம்மாளிடம் கொடுத்தாள். அதை வாங்கிய ரமாமணியம்மாள் அந்த எழுத்து மாசிலாமணி யின் கையால் எழுதப்பட்டதுதான் என்பதை உடனே நிச்சயித்துக் கொண்டு அதைப் படிக்கத் தொடங்கினாள். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:- - எனது அரிய நண்பரான ம-ா-ா-பூரீ சிவசிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு கும்பகோணம் மாசிலாமணி அநேக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழுதும் விக்ஞாபனம். உபய கூேடிமம். சில தினங்களுக்கு முன் பத்திரிகைகளில் வெளியான ஒரு விநோத சம்பவத்தை நீங்கள் படித்தறிந்து கொண்டிருக்கலாம். எங்கள் ஊர் மனிதர்கள் சிலர் கோமளேசுவரன் பேட்டைக்கு வந்திருந்ததாகவும், அவ்விடத்தில் அவர்களுக்கு அங்கஹனம் நடந்து போனதாகவும், அவர்கள் சென்னை ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் நீங்கள் படித்திருக்கலாம். அவர்களுள் மூக்கறுபட்டவளான ரமாமணி யம்மாள் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்காதென்று நினைக்கிறேன். என் வீட்டிற்கெதிரில் இருந்த குடிகார வக்கீலுக்கு இரண்டாவது சம்சாரமாக வந்து வாய்த்த புண்ணியவதி அவள் தான். அவள் தன் புருஷனை விஷம் வைத்துக் கொன்றதாக ஜனங்கள் சொல்லிக் கொண்டார்கள். அதை நான் அப்போது பொய் என்று நினைத்தேன். இப்போது அவளுடைய நடத்தை களைப் பார்க்கப் பார்க்க, அவள் விஷம் வைத்தது உண்மையாக இருக்கலாம் என்றே நினைக்கிறேன். அவள் இப்போது சென்னையில் யாருக்கோ ஏதோ கெடுதல் செய்ய உத்தேசித்து அங்கே வந்ததாகத் தெரிகிறது. அது அவளுக்கும் அவளைச் சேர்ந்த மற்றவருக்கும் வந்து வாய்த்தது போலிருக்கிறது. ஈசுவரன் மா.வி.ப.il-10 -