பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மாயா விநோதப் பரதேசி அவளை இப்படி மகா கொடுமையாகத் தண்டித்திருந்தும், அந்தத் தண்டனையை அனுபவித்திருக்கும் போதே அவள் இந்தக் கடிதம் கொண்டு வரும் அம்மாள் விஷயத்தில் ஒரு பெருத்த மோசம் செய்திருக்கிறாள். இந்த ஊரில் உள்ள ஒரு தவில்காரப் பையனை அவள் தன்னுடைய நெருங்கிய பந்து என்று பொய் சொல்லித் தங்களோடு கூடவே வைத்துக் கொண்டிருப்பதோடு இந்த அம்மாளுடைய சொத்துக்களை எல்லாம் தங்கள் பேருக்கு எழுதிக் கொண்டிருக்கிறாள். இந்த அம்மாளுடைய கைவசத்தில் இருக்கும் பத்திரத்தை நீங்கள் வாங்கிப் பார்த்தால், விவரம் உடனே விளங்கி விடும். உயர்ந்த ஜாதியில் பிறந்திருந்தும், இப்படி துராசாரமுள்ள வர்களாய் நடந்து கொள்ளும் அவர்களுடன் இந்த அம்மாள் இனி எவ்விதச் சம்பந்தமும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இந்த அம்மாள் கும்பேசுவர சுவாமிக்கு எழுதிவத்ைது, என்னையும், என் சந்ததியாரையும் சாசுவதமான தர்மகர்த்தாக்களாக நியமிக்க விரும்புகிறார்கள். பழைய பத்திரத்தையும் உடனே ரத்து செய்ய வேண்டும். அதற்குத் தகுந்தபடி தாங்கள் ஒரு புதிய பத்திரம் எழுதி அதை உடனே ரிஜிஸ்டர் செய்து வைக்கக் கோருகிறேன். அதுவுமன்றி, இந்த அம்மாள் பணம் போட்டிருக்கும் செட்டியாருக்கும் உடனே ஒரு நோட்டீஸ் அனுப்பி பணத்தை வட்டியும் முதலுமாகச் சேர்த்து உடனே என்னிடம் ஒப்படைக்குமாறு எழுதக் கோருகிறேன். இதற்குத் தங்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ அதை இந்த அம்மாள் உடனே கொடுப்பார்கள். காரியம் திருப்திகரமாய் முடிந்து போகுமானால், நானும் தங்களுக்குத் தக்க சன்மானம் ஏதாவது அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து இந்த வேலையைத் தாங்கள் நன்றாகக் கவனித்துப் பின்னால் எவ்விதச் சிக்கலும் ஏற்படாமல் முடித்துவைக்கக் கோருகிறேன். மற்றவை பின்னால், இங்ங்னம் தங்கள் விதேயன், மாசிலாமணி என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படிக்கும் போதே ரமாமணி யம்மாளின் மனதில் ரெளத்திராகாரமான கோபம் பொங்கி எழுந்தது. இரணியனது குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்து