பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 147 கொண்ட நரசிம்மாவதாரம் போல, அவள் தன்னை மறந்து வீராவேசம் கொண்டு கர்ச்சித்து அந்தக் கடிதத்தைக் கீழே வீசி எறிந்து அதை மிகுந்த ஆத்திரத்தோடு தனது காலால் உதைத்தவ ளாய், "ஆகா! அந்த மாசிலாமணிப் பயலுடைய சேதி எனக்குத் தெரியாதென்று நினைத்து என்னை இப்படித் தாறுமாறாக தூவிக்கிறான் போலிருக்கிறது! அவன் சொன்னதைக் கேட்டு நீங்கள் எங்களை அயோக்கியர்கள் என்றும், <2}{axí 65365T LD35řT யோக்கியன் என்றும் நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது. உங்களுடைய பணம் யாருக்கு வேண்டும்? நாங்களாக வந்து உங்களிடம் பணத்தை எல்லாம் எங்கள் பேரில் எழுதி வையுங்கள் என்று கேட்கவில்லையே. நீங்களே வந்து எழுதிக் கொடுத்தது தானே. எங்களுக்குச் சாப்பாட்டுக்குக் கதியில்லாமல் போகவில்லை. உங்கள் பணம் எங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் பத்திரத்தை ரத்து செய்து கொள்ளலாம். ஆனால், நீங்கள் அந்த நொண்டியின் மெத்தை வீட்டையும், அவனுடைய சொத்துக்களையும் பார்த்து விட்டு மயங்கிப் போய், அவன் மகா யோக்கியன் என்றும், பரிசுத்தவான் என்றும் நினைத்து ஏமாறிப் போனிகளே; அது தான் ஆச்சரியமாக இருக்கிறது. அவனுடைய அண்ணன் சட்டைநாத பிள்ளை என்று ஒருவன் இருந்தான். அவன் லஞ்சம் வாங்கி ஊரார் சொத்தை எல்லாம் கொள்ளையடித்து ஏராளமான சொத்துக்களைச் சேர்த்து வைத்து கடைசியில் பத்து வருஷம் தண்டனை அடைந்தான். அவனோடு இவனுக்கும் ஒரு வருஷ தண்டனை கிடைத்தது. இப்போதும் போலீசார் தினம் தினம் வந்து இவனை ஆஜர் பார்த்துப் போகிறார்கள். இவனும், இப்போது ஜெயிலில் இருக்கும் இடும்பன் சேர்வைகாரனும், எங்கள் முக்கு காதுகளை அறுத்ததற்காகச் சிறைபட்டிருக்கும் ஆள்களில் சிலரும் சேர்ந்து தஞ்சாவூர் ஜெயிலிலிருந்து அவனுடைய அண்ணனை விடுவித்துக் கொண்டு வந்து கும்பகோணத்தில் எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறார்கள். ஆகா அவர்கள் அவனை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை விசாரித்துத் தெரிந்து கொள்ளாமல் போய் விட்டேனே! தெரிந்து கொண்டிருந்தால், இப்போது அவர்களை எல்லாம் சந்தியில் இழுத்து விட்டிருப்பேனே. இப்போது இந்த மன்னார்குடியாரை மூளிப்படுத்த வேண்டும் என்று