பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மாயா விநோதப் பரதேசி இவர்களை அனுப்பியவனும் அந்த மாசிலாமணி தானே. இடும்பன் சேர்வைகாரன் உங்களுடைய மோதிரத்தைத் திருடி ஜெயிலுக்குப் போனமையால், அவனுடைய ஆள்கள் வந்து ஆள்மாறாட்டமாக எங்களை இந்தக் கொடுமைக்கு ஆளாக்கி விட்டார்கள். இதற்கு முன் அந்த மாசிலாமணியும் இடும்பன் சேர்வைகாரனும் சேர்ந்து, உப்பிலியப்பன் கோவிலில் உள்ள ஒரு பாம்பாட்டியைக் கொண்டு ஒரு பெட்டிக்குள் நாகப் பாம்புகளை வைத்து மன்னார் குடி திகம்பரசாமியாருக்கு அனுப்பி அவரைக் கொன்றார்கள். அதைக் கொண்டு போய்க் கொடுத்தவன் இந்த இடும்பன் சேர்வை காரனே. இதற்குச் சில தினங்களுக்கு முன், இந்த ஊர்க் கலெக்டருடைய மகளான மனோன்மணியை இதே இடும்பனும், இதே ஆள்களும் வந்து பலவந்தமாக அபகரித்து வரும்படி செய்த வனும் அந்த மாசிலாமணியே. அவர்கள் ஆள்மாறாட்டமாக வேறே யாரோ ஒரு பெண்ணை மாசிலாமணியிடம் கொண்டு போய்விட்டார்கள். அவளை அவன் இரண்டு மூன்று தினங்கள் வைத்து கற்பழித்து, இரவோடிரவாய் எங்கேயோ கொண்டு போய் விட்டுவிட எண்ணி இருந்தான். அப்போது நாங்கள் புறப்பட்டு இந்த ஊருக்கு வந்துவிட்டோம் ஆகையால், அவன் அந்தப் பெண்ணை என்ன செய்தான் என்பது தெரியவில்லை. இப்படி எல்லாம் அந்த மாசிலாமணி இது வரைக்கும் செய்திருக்கும் மகா கொடிய அட்டுழியங்களைச் சொல்லப் போனால், அது ஒரு பெரிய பாரத கதை போல இருக்கும். அவனைப் போல அயோக்கியனும், துஷ்டனும், பஞ்சமா பாதகத்தில் இறங்கக் கூடியவனும், இந்த உலகத்தில் இதுவரையில் பிறந்தே இருக்க மாட்டான்: இனி பிறக்கப் போவதுமில்லை. அப்படிப்பட்ட பரம சண்டாளனை நீங்கள் உங்கள் சொத்துக்குத் தர்மகர்த்தாவாகப் பொறுக்கி எடுத்தீர்களே. அது தான் எனக்குப் பரம சந்தோஷமாக இருக்கிறது. இப்படிப்பட்ட அற்பபுத்தியுடைய அந்தக் கொலை பாதகன், நான் என் புருஷனுக்கு விஷம் வைத்ததாகச் சொல்லுகிறான் அல்லவா. அது உண்மையாகவே இருக்கட்டும். அதற்கு விஷம் வாங்கிக் கொடுத்தவன் அவன் தான் என்று நான் சொல்லுகிறேன்" என்று நிரம்பவும் ஆத்திரமாகவும் பதைபதைப் பாகவும் ஓங்கிய குரலிலும் கூறி நிறுத்தினாள்.