பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 149 அந்த வசை மொழிகளைக் கேட்ட நீலலோசனியம்மாள் குன்றிப் போனதன்றி நிரம்பவும் அஞ்சி நடுங்கி, "அம்மா இது ஆஸ்பத்திரி; யாராவது வந்து கோபித்துக் கொள்வார்கள். பலமாய்க் கூச்ச லிடாமல் பேசம்மா" என்றாள். அவள் அவ்வாறு பேசி வாய் மூடுமுன், அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு அந்த ஆஸ்பத்திரியின் பெரிய டாக்டரும், இரண்டாவது டாக்டர் முதலியாரும் திடீரென்று தோன்றினார்கள். அவர்களைக் கண்டவுடன் அங்கிருந்த இருவரும் சடக்கென்று எழுந்து வெட்கித் தலைகுனிந்து நின்றார்கள். ரமாமணியம்மாளால் எறியப்பட்ட கடிதத்தை நீலலோசனியம் மாள் உடனே எடுத்துத் தனது மடியில் சொருகிக் கொண்டாள். அங்கே வந்த பெரிய டாக்டர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் இந்த அறைக்குள் ஏன் வந்தீர்கள்? இதற்குள் யாரையும் விடாமல் பார்த்துக் கொள்ளும்படி ஒரு சேவகனை வாசலில் வைத்திருந் தேனே! அவன் உங்களைத் தடுக்கவில்லையா?" என்றார். நீல லோசனியம்மாள், "யாரும் தடுக்கவில்லையே இந்த அம்மாளோடு நான் ரகசியமான சில குடும்ப விஷயங்கள் பேச வேண்டியிருந்தது. இந்த அறை காலியாக இருக்கிறதே என்று இங்கே அழைத்துக் கொண்டு வந்தேன். யாரும் இங்கே வரக் கூடாதென்றால், நாங்கள் இதோ வெளியில் போய்விடுகிறோம்" என்றாள். உடனே டாக்டர் துரை, "நீங்கள் இந்த அறைக்குள் வந்து ஏதாவது பேசினர்களா?" என்றார். நீலலோசனியம்மாள், "ஆம், கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந் தோம்" என்றாள். டாக்டர் துரை ஒருவாறு கோபங் கொண்டு, "ஆ பேசினர்களா? எங்கே இருந்து பேசினர்கள்?" என்றார். நீலலோசனியம்மாள், "இந்த விசிப்பலகையின் நடுவில் உட்கார்ந்து பேசினோம். ஏன், நாங்கள் ஏதாவது தவறு செய்து விட்டோமா?" என்று நிரம்பவும் விநயமாகக் கேட்டாள்.