பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 50 மாயா விநோதப் பரதேசி டாக்டர் துரை, "அடாடா என்ன காரியம் செய்து விட்டீர்கள்: வாசலில் காவல் காத்திருந்த அந்த மூடன் எங்கே போனான் என்பது தெரியவில்லையே! ஒரு முக்கியமான காரியத்தை உத்தேசித்து அல்லவா நாங்கள் இந்த அறையைக் காலி செய்து, பலகையைப் போட்டு வைத்திருந்தோம். ஒரு பெரிய குற்றவாளி நோய் கொண்டு இந்த ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருக்கி றார். அவர் தம்முடைய குற்றத்தைத் தாமே ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார். அவருடைய மனதில் முக்கியமான பல ரகசியங்களை அவர் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறார். அவரைக் கொன்றாலும், அவர் அவைகளை வெளியிட மாட்டார் ஆதலால், எப்படியாவது தந்திரம் செய்து ரகசியங்களை வெளிப்படுத்தும்படி கவர்னர் துரை உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்தச் சமயத்தில் கல்கத்தாவிலிருந்து மிஸ்டர் வெல்டன் என்று ஒரு பிரபல டாக்டர் வந்திருக்கிறார். அவர் ஒரு தந்திரம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். அந்தக் குற்றவாளிக்கு அவர் உள்ளுக்கு ஒருவித மருந்து கொடுத்திருக்கிறார். அந்த மருந்து அவரால் தாங்க முடியாத படி பித்தத்தைக் கிளப்பிவிடும். அதுவுமன்றி, அந்த மருந்தில் மயக்க மருந்தும் கலந்திருப்பதால், அந்தக் குற்றவாளி உடனே மயக்கத்தில் ஆழ்ந்து போவார். பித்தப் பெருக்கினால் அவருடைய மூளையில் பதிந்து கிடக்கும் விஷயங்களை அவர் தாறுமாறாகப் பிதற்றிக் கொண்டே இருப்பார். அந்தப் பிதற்றலை அப்படியே கிராமபோன் எந்திரத்தில் பிடித்து, அதை வைத்து ஆராய்ச்சி செய்து கூடிய வரையில் உண்மைகளைக் கண்டு பிடித்து விடலாம் என்று, அந்த வெல்டன் துரை சொல்லி அதற்காக இந்த அறையில் உள்ள பலகையில் மேற்படி குற்றவாளியைப் படுக்க வைக்கிறதென்று ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் குற்றவாளிக்கு உள்ளுக்கு மருந்து கொடுத்திருக்கிறோம். அவர் பிதற்ற ஆரம்பித்திருக்கிறார். அவரைக் கொண்டு வந்து இந்தப் பலகையில் படுக்க வைக்க வந்தோம். அதற்குள் நீங்கள் யாருக்கும் தெரியாமல் இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உட்கார்ந்திருந்தீர்களே, உங்களுக்குப் பின் பக்கத்தில் ஜன்னலில் அதோ கிராமபோன் யந்திரம் வைக்கப் பட்டிருக்கிறதே. அதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்றார்.