பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 மாயா விநோதப் பரதேசி எங்கள் இருதயம் அப்படியே படீரென்று இரண்டாய்த் தெறித்து விடும்போல இருக்கிறதே" என்று முற்றிலும் தழுதழுத்து நெகிழ்ந்து உருகிய குரலில் கூறி ஆனந்த நிர்த்தனம் செய்தனர். அத்தனை ஜனங்களும் ஒரே காலத்தில் தங்களது பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தித் தம்மனத்தில் பொங்கி எழுந்த விஷயங்களை வாய்விட்டு வெளியிட்டுக் கூக்குரல் செய்த காட்சி சொல்லிலும் மனத்திலும் அடங்காத மகா விநோதக் காட்சியாகவும், கன்னெஞ் சரையும் கதறியழச் செய்யும் மகா உருக்கமான காட்சியாகவும் இருந்தது. வேலாயுதம் பிள்ளை முதலியோருக்கு.மகா விபரீதமான அங்துரீனம் நடந்துவிட்ட தென்பதைக் கேட்ட முதல் அந்த விருந்தினர் கந்தசாமி காணாமல் போன விஷயத்தை அவ்வள வாகப் பாராட்டாது பிரயாணம் செய்து வந்தனர். வேலாயுதம் பிள்ளை முதலியோருக்கு என்றைக்கும் மாறாத களங்கம் ஏற்பட்டு விட்டதே என்ற நினைவும் பெருந் துயரமுமே அவர்களது மனத்தை முற்றிலும் கவர்ந்து கொண்டிருந்தமையால், அவர்கள் கந்தசாமியைக் குறித்துக் கவலைப்படுவதையே விட்டிருந்தனர். ஆயினும் வேலாயுதம் பிள்ளை முதலியோர் கேஷமமாக இருக்கின்றனர் என்பதைக் கண்ட பிறகே, அவர்களது பதை பதைப்பும் ஆவேசமும் தணிவடைந்தன. அவர்களது மனத்தில் கந்தசாமி காணாமல் போனதைப் பற்றிய நினைவும் கவலையும் தோன்ற ஆரம்பித்தன. கந்தசாமி பெண் வேஷந் தரித்து மனோன் மணியம்மாளைப் பார்க்க வந்தான் என்ற விஷயத்தைத் தமது வாயால் வெளியிட வேலாயுதம் பிள்ளை லஜ்ஜையடைந்தார் ஆகையால், அவன் அப்போதும் காணப்படவில்லை என்றும், அதைக் கருதியே தாம் உபவாசம் இருந்து சிவபூஜை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். சுந்தரம் பிள்ளை முதலிய விருந்தினரோடு வந்த பெண்பாலார் எல்லோரும் திரிபுரசுந்தரி யம்மாளும் வடிவாம்பாளும் இருந்த இடத்தை அடைந்து, சமாசாரப் பத்திரிகையில் வெளியான விபரீதச் செய்தியைக் கேட்டது முதல் தாங்கள் பட்டபாட்டையும், தங்களது மனம் தவித்த தவிப்பையும் எடுத்துக் கூறிப் பதறிக் கதறியழுததன்றி, அவர்கள் எல்லோரும் எவ்வித அங்கஹரீனமுமின்றி, செளக்கிய மாய் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து ஆனந்தக் கண்ணிர்