பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 167 மாள், தக்க பெரிய மனிதர்களான இன்னும் சுமார் நாற்பத்தைந்து விருந்தினர் ஆகிய எல்லோரும் ஆவலும், துயரமும் வடிவெடுத்த தெனும்படி திங்கட்கிழமை காலையில், பட்டாபிராம பிள்ளையின் பங்களாவை அடைந்த பரிதாபகரமான காட்சி கல்லையும் கரையச் செய்யத் தக்கதாய் இருந்தது. "ஐயோ! தங்களுக்கு இப்பேர்ப்பட்ட கோலமும் வரவேண்டுமா!" என்று ஒலமிட்டு கோவெனக் கதறி அழுது கொண்டு உள்ளே நுழைந்த அத்தனை ஜனங்களும் வேலாயுதம் பிள்ளை முதலியோர் எவ்வித அங்கஹறினமும் அடையாமல், செளக்கியமாய் இருக்கிறார்கள் என்றும், சமாசாரப் பத்திரிகையில் வெளியானது தப்பான வரலாறு என்றும் தெரிந்து கொள்ளவே, அவர்கள் எல்லோரும் அந்த எதிர்பாராத சந்தோஷச் செய்தியினால் ஏற்பட்ட ஆனந்தப் பெருக்கையும், தமது மனோமெய்களின் பூரிப்பையும் தாங்கமாட்டாதவர்களாய்க் கன்றைப் பிரிந்து கண்ட தாய் போல கோவென்று வாய்விட்டுக் கதறியழுது ஆனந்த பாஷ்பம் சொரிந்தனர். அவர்களுள் வயோதிகர்களாக இருந்தோர் அப்படியே ஒடிப்போய் வேலாயுதம் பிள்ளை, கண்ணப்பா ஆகிய இருவரையும் குழந்தையை வாரி எடுப்பது போலத் துக்கி எடுத்துக் கட்டித் தழுவி விம்மி விம்மி அழத் தொடங்கி, "ஆகா! நேற்று முதல் எங்கள் உயிர் எங்கள் தேகத்திலேயே இல்லாமல் போய்விட்டது. நாங்கள் நடைப் பிணங்கள் போலவே வந்தோம். நேற்று முதல் எங்கள் மனம் பட்டபாடு ஈசுவரனுக்குத் தான் தெரிய வேண்டும். நல்ல வேளையாக கடவுள் நம்முடைய பங்கிலிருந்தார். பத்திரிகையில் வந்த சங்கதி பொய்யாக இருக்கக் கூடாதா என்று எண்ணி எண்ணி நாங்கள் தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டே வந்தோம். உங்கள் சம்பந்தி சுந்தரம் பிள்ளைக்கு பிரக்ஞை என்பதே இல்லை. அவர் பைத்தியக்காரர் போல சித்தப்பிரமை கொண்டவராகவே இருந்தார். அந்த பங்கரமான செய்தி பொய்யாக இருந்தால், தம்முடைய சொத்தில் சரிபாதியை சுவாமியின் அபிஷேக வைவேத்தியங்களுக்கு சாசுவதமாய் எழுதிவைத்து விடுவதாக அவர் பிரார்த்தனை செய்து கொண்டே வந்தார். போகட்டும், கடவுள் எங்கள் வயிற்றில் எல்லாம் பாலை வார்த்தார். எங்களுக்கு இப்போது இருக்கும் சந்தோஷ பெருக்கைத் தாங்க மாட்டாமல்