பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 மாயா விநோதப் பரதேசி வியப்பை உண்டாக்கியது. ஆயினும் தாங்கள் பார்த்த வரையில் மனோன்மணியம்மாள் சகலமான உத்தம லட்சணங்களும் பொருந்தி, மிருதுத்தன்மையே வடிவெடுத்ததோ என்னும்படி இருக்கின்றாள் ஆதலால், கந்தசாமி அவளைக் கண்டு முற்றிலும் திருப்தியடைந்தே போயிருக்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தும் கொண்டனர். ஆனாலும், தாம் கூடிய விரைவில் கோபாலசாமியுடன் பேசி, அவர்கள் மாறுவேஷத்துடன் மனோன் மணியம்மாளிடம் வருவதற்கு முன் அவர்கள் இருவருக்குள் நடந்த யோசனைகளை விவரமாய் அறிய வேண்டும் என்று நினைத்து அந்த நினைவைக் கண்ணப்பாவிடம் தெரிவித்தனர். அவன் மறுநாட் காலையில் எழுந்தவுடன் வைத்திய சாலைக்குப் போய் கோபாலசாமியைக் கண்டு அவனுடன் பேசிவிட்டுத் திரும்பி வந்து கந்தசாமிக்கும் கோபாலசாமிக்கும் முதன் முதலில் கடற்கரையில் நடந்த சம்பாஷணையின் விவரத்தைக் கூறினான். தன்னோடு பட்டாபிராம பிள்ளையின் பங்களாவிற்கு வரும்படி கண்ணப்பா கோபாலசாமியையும் அழைத்தான் ஆனாலும், அவன் பட்டாபிராம பிள்ளை மனோன்மணியம்மாள் முதலி யோருக்கு முன்னால் வருவதற்கு வெட்கமடைந்தவனாய் அங்கே வரமறுத்து வைத்திய சாலையை விட்டுக் கோமளேசுவரன் பேட்டையில் இருந்த தனது பழைய ஜாகைக்குப் போய்விட்டான்; ஆகவே, நாம் முன்னர் கூறியபடி கந்தசாமியின் வரலாற்றில் சிறிதளவு வேலாயுதம் பிள்ளை முதலியோருக்குத் தெரிந்தது ஆனாலும், அவன் எப்படிப்பட்ட துஷ்டர்களிடம் அகப்பட்டுக் கொண்டானோ, அவர்கள் அவனை உயிருடன் வைத்திருக்கிறார் களோ, அல்லது, அவனது உயிருக்கு ஏதேனும் ஹானி செய்து விட்டார்களோ, அவன் திரும்பி வருவானோ என்பது போன்ற மகா துன்பகரமான சந்தேகங்கள் எல்லாம் அவர்களது மனத்தில் தோன்றி அவர்களை நரக வேதனைக்கு ஒப்பிடத்தக்க அபாரமான சஞ்சலக் கடலில் ஆழ்த்தியபடி இருந்து வந்தன. - அத்தகைய மன நிலைமையில் அவர்களது சிவபூஜை மூன்றாவது தினமாகிய திங்கட்கிழமையோடு முடிவடைந்தது. அந்தச் சமயத்தில், முதல் நாளைய ரயிலில் மன்னார் குடியிலிருந்து புறப்பட்ட சுந்தரம் பிள்ளை, அவரது மனைவி சிவக்கொழுந்தம்