பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1.65 புகழ் படைத்த மனுநீதிச் சோழன் இந்தச் சமயத்தில் இல்லாமல் போய்விட்டானே! அத்தகைய தர்ம மூர்த்திகளின் வம்சம் எல்லாம் அழிந்து போய்விட்டதே. இனி இந்தத் தேசத்தில் தரும தேவதை இருப்பதே தகாதென்றும், நம் தேசத்தில் தோன்றும் புருஷர் களுக்கு எவ்விதப் ப்ரக்யாதியும் இருக்கவே கூடாதென்றும் கடவுள் தீர்மானித்து விட்டாரோ! இத்தகைய அதிமாதுவடித் தன்மைகள் பூவுலகத்தில் இருப்பது தகாதென்பது கடவுளின் கருத்தாக இருக்குமோ ஆகா! நம்முடைய தமிழ்நாடு இருந்த இருப் பென்ன! அது இப்போது, என்ன நிலைமைக்கு வந்திருக்கிறது. அதில் தோன்றும் உத்தம சிரேஷ்டர் எல்லோரும் தோன்றாதவர்க ளாக அல்லவா இருக்கிறார்கள் ஆகா! என்ன கால வித்தியாசம் இது!" என்று வாய்விட்டுக் கூறி அங்கலாய்த்துக் கொண்டனர். முதல் நாளைய பூஜை முடிவடைந்தவுடன் அன்று மாலையி லேயே போலீஸ் கமிஷனரும், மிஸ்டர் வெல்டன் துரை என்பவரும் வந்து கோபாலசாமி தெரிவித்த முக்கியமான விஷயத்தை வெளியிட்டனர். ஆதலால், வேலாயுதம் பிள்ளை செய்த சிவபூஜையின் பலன் கையின்மேல் பலித்து விட்டது என்ற எண்ணமே எல்லோரது மனத்திலும் தோன்றிவிட்டது. அது வரையில் கந்தசாமி இன்னவிதமாய்க் காணாமல் போனான் என்ற குறிப்பே சொற்பமும் தெரியாதிருந்ததற்கு, அவன் பெண் வேஷந் தரித்து வந்து பட்டாபிராம பிள்ளையின் பங்களாவில் சிறை வைக்கப்பட்டிருந்த நிலைமையில் சில முரடர்களால் அபகரித்து எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறான் என்ற முக்கியமான செய்தி வெளியானதில் இருந்து மேலும் சில தினங்கள் கழிவதற்குள் அவனைப் பற்றிய வரலாறு முழுதும் அவசியம் தெரிந்து போய் விடும் என்ற நம்பிக்கை வேலாயுதம் பிள்ளை முதலிய எல்லோரது மனத்திலும் தோன்றிவிட்டது. ஆகவே அவர்களது தெய்வ பக்தியும் உருக்கமும் பூஜையின் சிரத்தையும் முன்னிலும் பதினாயிரம் மடங்கு அதிகரித்தன. அதுவுமன்றி அதுகாறும் தமது சொற்படி நடந்து வந்த மகா உத்தம குணங்கள் வாய்ந்த சற்புத்திரனான கந்தசாமி அந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் அவ்வாறு புதுமையாக நடந்து கொண்டது வேலாயுதம் பிள்ளை, அவரது மனைவியார் ஆகிய இருவரது மனத்திலும் அபாரமான