பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மாயா விநோதப் பரதேசி இருபத்திரண்டாவது வள்ளலை ஏற்படுத்துவதற்கு நாதனற்றதாய் நம் தமிழ் நாடு இப்படிப்பட்ட பரிதாபகரமான நிலைமையில் இருக்கிறதே பொய் சொல்லாதவன் அரிச்சந்திரன் ஒருவனே என்றால், நம் தேசத்தில் உதிக்கும் மற்றவர் எல்லோரும் பொய் சொல்லுகிறவர்கள் என்ற இழுக்கல்லவா ஏற்படுகிறது. இந்த வேலாயுதம் பிள்ளையைப் போன்றவர்கள் தம் உயிர் போவதா னாலும் கனவில் கூடப் பொய் சொல்ல மாட்டார்களே. இவர்களை ஏன் நாம் இரண்டாவது அரிச்சந்திரன், மூன்றாவது அரிச்சந்திரன் என்று குறிக்கக் கூடாது. நாயன்மார்களிலும், வள்ளல்களிலும் ஜாப்தா ஏற்பட்டது போல, உண்மை பேசுவதிலும் இப்படி ஒரு ஜாப்தா ஏற்பட்டால், இந்த வேலாயுதம் பிள்ளையைப் போன்ற மகான்களின் பெயர் நிரந்தரமாக உலகத்தாரின் மனதை விட்டகலாமல் இருப்பதோடு, அவர்களது உதாரணத்தைப் பின்பற்றி மற்றவர் நடப்பதற்கும் அது ஒரு துண்டு கோலாக இருக்கும் அல்லவா? இந்த வேலாயுதம் பிள்ளையை நாயனார் என்றும், வள்ளல் என்றும், கர்ணன் என்றும், அரிச்சந்திரன் என்றும் பெயர் கொடுத்தழைக்க, தஞ்சையில் ராஜ ராஜ சோழன் இல்லாமல் போய்விட்டானே! மதுரையில் வரகுணபாண்டியனுடைய வம்சம் அற்றுப் போய்விட்டதே: காஞ்சிமா நகரம் தொண்டைமானின்றி நிற்கிறதே ஆகா இந்த உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் காணப்படாத மகா அற்புதமான வேலைப் பாடுகளும் திறமையும் வலிமையும் நிறைந்துள்ள ஆயிரக் கணக்கான சிவாலயங்களையும், விஷ்ணுவாலயங்களையும், ஆறு களையும், தடாகங்களையும், சாலைகளையும், சத்திரம் சாவடி களையும் தென்னாடெங்கும் நிரப்பி, மனித சமூகத்தார் நற்குண நல்லொழுக்கம், தெய்வ பக்தி முதலியவற்றைக் கடைப்பிடித்து நீதிநெறி தவறாமல் ஒழுகி, உய்ந்து போமாறு எண்ணிறந்த சாதனங்களை அமைத்து வைத்துள்ளவர்களான நமது தமிழ்நாட்டு வேந்தர்கள் எல்லோரும் இருந்த இடம் தெரியாதபடி மறைந்து போய் விட்டார்களே! ஆ! கொடுமையே! தன் கன்று தேர்காலில் அகப்பட்டு இறந்து போனதாகத் தாய்ப்பசு சோழ மகாராஜனிடம் முறையிட, அவ்வாறு அஜாக்கிரதையாகத் தேர்விடுத்த தனது சொந்த மகனுக்கு மரண தண்டனை விதித்து என்றும் அழியாப்