பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் # 63 உண்மையான சிவபக்தர்" என்று வேலாயுதம் பிள்ளையை மனதார ஸ்தோத்திரம் செய்து புகழ்ந்த வண்ணம், அந்த சிவபூஜை நிரம்பவும் மேன்மை அடையும்படி செய்தனர். அவர்கள் எல்லோரும், "ஐயா! தமிழ்நாட்டைப் போலத் தவம் செய்த நாடு இந்த உலகத்தில் எங்கே இருக்கிறது. பரிசுத்தமான மனதும், உத்தமமான குணங்களும், மாசற்ற நடத்தையும், உண்மையான பக்தியும், அபாரமான ஞானமும் பெற்று இயற்கையிலேயே தெய்வத் தன்மை வாய்ந்து நடக்கும் இந்த வேலாயுதம் பிள்ளையைப் போன்ற மகா சிரேஷ்டமான புருஷர்கள் இந்தத் தமிழ் நாட்டில் அன்றோ இன்னமும் காணப்படுகின்றனர். நாயன் மார்கள் அறுபத்து மூவர் என்றும், வள்ளல்கள் இருபத்தொருவர் என்றும், கொடையில் சிறந்தவன் கர்ணன் என்றும், பொய் சொல்லாதவன் அரிச்சந்திரன் என்றும் நம்மவர் கணக்கெடுத்து வரையறுத்து விட்டார்களே. இவர்களோடு தமிழ்த்தாய் மலடாய்ப் போய்விட்டாளா? மேலே குறிக்கப்பட்ட குணங்கள் எல்லாம் தமிழ் நாட்டினரின் இரத்தத்திலிருந்து வறண்டு போய்விட்டனவா, அல்லது, அவர்களைவிட சிரேஷ்டமாகவோ சொல்லத்தக்க தெய்வபக்தியும் ஒழுக்கத் துய்மையும் வாய்ந்த மனிதர்கள் எத்தனையோ பேர் உற்பத்தியாகிறார்களே அறுபத்து நான்காவது ஸ்தானத்தை அடையத்தக்க யோக்கியதை வாய்ந்த மனிதர் இது வரையில் பிறக்கவே இல்லையா? அல்லது, இனி பிறக்கப் போவதே இல்லையா? அக்காலத்தில் இருந்த புலவர்களான அவ்வை முதலியோருக்குக் கூழ் வார்த்த காரி, பாரி முதலியோர் வள்ளல்கள் என்ற என்றும் அழியாப் பெயர் பெற்று விளங்கு கிறார்களே. எண்ணிக்கையற்ற ஏழைகளுக்குத் தேவாமிருத போஜனம் செய்பவர்களும், சத்திரம், சாவடி, பள்ளிக்கூடம் முதலிய பெருத்த தர்மங்களை ஸ்திரமாக ஏற்படுத்தி இருப்பவர் களுமான இந்த வேலாயுதம் பிள்ளையைப் போன்ற எத்தனையோ தனவந்தர்களும், நாட்டுக் கோட்டைச் செட்டிமார் களும் இப்போதும் இருக்கிறார்களே. இவர்கள் செய்யும் தருமத்திற்கும், இவர்களுடைய மேன்மையான மனப் போக்கிற்கும், முன்னிருந்ததாகச் சொல்லப்படும் இருபத்தொரு வள்ளல்களின் தர்மங்களும் மனப்போக்கும் ஈடு நிற்குமா?