பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 மாயா விநோதப் பரதேசி தாமரை இலைத் தண்ணித் துளிபோலத் தத்தளித்து வேதனைக் கடலில் ஆழ்ந்தவனாய் நின்று கொண்டிருந்தான். ★ 女 ★ 14-வது அதிகாரம் தொடில் சுடும் நெருப்பு; விடில் சுடும் விரகநோய் நமது தமிழ்நாட்டு வள்ளலான பூரீமான் வேலாயுதம் பிள்ளை அவர்களின் சிவபூஜை முதல் நாளில் நடந்ததைக் காட்டிலும் நூறு மடங்கு சிறப்பாய் மற்ற இரண்டு தினங்களிலும் நடந்தேறியது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று தினங்களிலும் அவர் மூன்று கை தண்ணிரும் மூன்று துளி விபூதியும் உட்கொண்டார் ஆனாலும், அவைகளை அவர் கேவலம் தமது வயிற்றுப் பசியைத் தீர்க்கும் ஆகாரம் என்று நினைத்து உட்கொள்ளாமல், தமது மனத்தையும், தேகத்தையும் தூய்மைப்படுத்தி, அவற்றின் பாவமலங்களை அறுப்பதான தெய்வப் பிரசாதம் என்று மதித்தே அவர் அவற்றை உபயோகித்தார். ஆயினும், அவர் தாம் அவ்வாறு கடுமையான விரதம் பூண்டு நடப்பதைக் கண்டு மற்றவரும் அது போலவே தங்களது தேகத்தை வதைத்துக் கொள்ளக் கூடாதென்று கூறியிருந்தார் ஆதலால், அவரது சொல்லை வேதவாக்கியமாக மதித்து வந்த மற்றவர் சொற்பமாகப் பலகாரம் செய்து கொண்டனர். கந்தசாமி மாயமாய் மறைந்து போனதைப் பற்றியும், அவன் மறுபடி செளக்கியமாய்த் திரும்பிவர வேண்டுமே என்பதைப் பற்றியும் அவர்கள் எல்லோரும் கட்டிலடங்கா மன வேதனையும், பெருங் கவலையும் கொண்டு தவித்திருந்தனர் ஆதலின், அவர்களது மனம் ஆகாரம் முதலிய செளகரியங் களையே சிறிதும் நாடவில்லை. அவர்களது நிலைமை அங்ங்னம் இருந்ததாயினும், அந்த மூன்று தினங்களிலும், ஆயிரக்கணக்கான ஏழைகளும், பரதேசிகளும் முப்பழம், ஐந்துவித பகடினம், ஏழுவகைச் சித்திரான்னம், பாயசம் முதலிய விசேஷப் பதார்த்தங் களுடன் கூடிய அறுசுவைப் போஜனம் அளிக்கப்பெற்று வயிறார உண்டு, "இவரே கர்ண் மகாராஜன், இவரே வள்ளல் ஏழு, இவரே