பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 16i ஜெயிலில் இருந்து தப்பி ஓடிவந்து விட்டதாகவும், அவர் இருக்கும் இடத்தைக் காட்டுகிறவருக்குப் பதினைந்து ஆயிரம் ரூபாய் வெகுமதி தருவதாகவும் தஞ்சாவூர் போலீசார் ஒரு விளம்பரம் வெளியிட்டிருக்கிறார்கள். அது இதோ தொங்குகிறது. ஆகா! அவர் எங்கே இருக்கிறார் என்பது இந்தச் சமயத்தில் எனக்குத் தெரிந்திருந் தால், அதைச் சொல்லிவிட்டு, அந்த ரூபாயை வாங்கி உம்முடைய அவசரத்திற்கு உபயோகப்படுத்தி உம்மை நான் தப்பவைப்பேன். இந்த விளம்பரத்தில் இருப்பதைப் பார்த்தால் அண்ணன் பெரிய கொலை பாதகன் போலிருக்கிறது. அதுபோலவே தான் அவனுடைய தம்பியும் இருக்கிறான். அவர்கள் இருவரையும் உயிரோடு கழுமரத்தில் ஏற்றினால்கூட பாவம் உண்டாகாது. அதனால் பெருத்த புண்ணியம் உண்டாகும் என்று நினைக்கிறேன்" என்றார். அதைக் கேட்ட சேர்வைகாரன் சுவரண்டை போய் அந்த விளம்பரத்தைப் பார்த்துக் கவனமாகப் படித்த பின், "ஐயா! எனக்குத் தெரிந்த மனிதன் ஒருவன் கும்பகோணத்தில் இருக்கிறான். இந்த சட்டைநாத பிள்ளையை அவர்கள் ஒளிய வைத்திருக்கும் இடம் அவனுக்குத் தெரியும். அவன் மூலமாய் நான் அந்தத் தகவலைத் தெரிந்து கொண்டு உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் இந்தத் தொகையை வாங்கி இவர்களுக்குக் கொடுத்துவிட்டு என்னை விடுவிக்க ஏற்பாடு செய்கிறீர்களா?" என்றான். சாயப்பு, "சேர்வைகாரரே, நீர் கவலைப்படாதேயும். நீர் இப்போது சொன்ன விஷயத்தை நான் சப் இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்து, உமக்குத் தக்க உறுதிமொழி வாங்கித் தருகிறேன். நான் மறுபடியும் வருகிறேன். நீர் இவ்விடத்திலேயே இரும்" என்று கூறிய வண்ணம் எழுந்து வெளியில் சென்றார். தனியாக விடப்பட்ட இடும்பன் சேர்வைகாரன் மறுபடி சாயப்பு திரும்பி வருவாரோ, வந்தாலும், என்னவிதமான செய்தி கொண்டு வருவாரோ, தான் தப்பமுடியுமோ, தன்னிடம் எல்லா ரகசியங் களையும் தெரிந்து கொண்டு போலீசார் தன்னையும் மரண தண்டனைக்கு ஆளாக்கி விடுவார்களோ என்று பலவாறு சிந்தித்து tar.go.L.HH-11