பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மாயா விநோதப் பரதேசி ஒடிப் போகலாம் என்றும் ஆசையோடு எதிர்பார்த்திருந்தது முற்றிலும் ஏமாற்றமாக முடிந்து போகவே, அந்த அபாய சமயத்தில் தான் என்ன செய்கிறது என்ற பெருத்த கிலியும் கலவரமும் பெருகி அவனது மனத்தைக் கப்பிக்கொண்டன. தான் என்ன செய்வது, அல்லது, என்ன சொல்வது என்பதை அறியாமல் அவன் பேச்சு மூச்சற்று அப்படியே கல்போலச் சமைந்து நின்று விட்டான். அவ்வாறு இடும்பன் சேர்வைகாரன் மாசிலாமணியின் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், சாயப்பு அந்த அறைக்குள் சுவர்களில் தொங்கவிடப் பட்டிருந்த போலீஸ் விளம்பரங்களை எல்லாம் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டே நின்றவர் எதையோ கண்டு திடுக்கிட்டவர் போல, "ஐயா! சேர்வை காரரே இந்தக் கடிதம் அனுப்பியிருக்கும் உம்முடைய சிநேகிதரின் பெயர் மாசிலாமணிப் பிள்ளை அல்லவா? அவர் இருப்பது கும்ப கோணம் பெரிய தெருவல்லவா?" என்றார். அதைக் கேட்ட சேர்வைகாரன், "ஆம்" என்றான். சாயப்பு, "அவருடைய அண்ணன் சட்டைநாத பிள்ளை என்று ஒருவர் இருந்து தண்டனை அடைந்ததுண்டா?" என்றார். சேர்வைகாரன், "ஆம்" என்றான். உடனே சாயப்பு, "அது இருக்கட்டும். கடிதத்தைப் படித்தீரே? என் குமாஸ்தா சொன்ன படியே தான் எழுதி இருக்கிறாரா? அல்லது, பணம் அனுப்புவதாக எழுதி இருக்கிறாரா?" என்றார். சேர்வைகாரன் நிரம்பவும் ஆத்திரத்தோடு, "சாயப்பு ஐயா அந்த மனிதனுக்கு நான் செய்திருக்கும் உதவிகளுக்கு அவன் எனக்குத் தன்னுடைய உயிரைக்கூடத் தரக் கடமைப்பட்டிருக்கிறான். அவன் எழுதியிருப்பது என் மனசை ரம்பத்தால் அறுப்பது போல இருக்கிறது. அவன் ஈவிரக்கமற்ற கொடிய பாதகனாக இருக்கிறான். அவனை என்ன செய்வதென்பது தெரியவில்லை" என்றான். அதைக் கேட்ட சாயப்பு தாமும் கோபம் கொண்டவராய், "ஐயா! சேர்வைகாரரே! அவருடைய அண்ணன் சில தினங்களுக்கு முன்