பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 159 மாதிரி முடிந்தது. அந்த மனிதனை மதித்து நீர் கடிதம் எழுதிக் கொடுத்தீரே. அவன் என்னுடைய குமாஸ்தாவை அவமரியாதைப் படுத்தியதோடு, உம்மையும் நாயென்றும் கழுதை என்றும் வாயில் வந்தபடி வைது கோபத்தோடு ஏதோ கடிதம் எழுதிக் கொடுத்தானாம்; பணம் கொடுக்கவும் இல்லையாம்; தான் வருவ தாகவும் சொல்லவில்லையாம். இந்த மாதிரி நீர் இனி கடிதம் எழுதி அனுப்பினால், அதைப் போலீசாருக்கு அனுப்புவானாம்; கடிதம் கொண்டு போகிறவனுக்கும் மரியாதை நடத்துவானாம்" என்று கூறிய வண்ணம் தமது சட்டைப் பையில் இருந்த கடிதம் ஒன்றை எடுத்து சேர்வைகாரனிடம் கொடுத்தார். அவன் அவரது வார்த்தை களைக் கேட்டுக் கலகலத்துப் போய் வெட வெடவென்று ஆடிய கைகளோடு கடிதத்தை வாங்கிப் பிரித்துப் படிக்கலானான். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: அடேய் இடும்பன் சேர்வை திருட்டு நாயே! உனக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம்? என்னை சென்னைக்கு வரும்படி அழைக்க உனக்கு அவ்வளவு துணிவா? உனக்காகப் பதினையா யிரம் ரூபாய் செலவு செய்து உன்னை மீட்க எனக்கு என்ன அக்கறை வந்திருக்கிறது? நீ கொழுப்பெடுத்துப் போய்த் திருடினால் அதற்கு நானா பிணை? நீ எக்கேடு கெட்டு எருக்கு முளைத்துப் போ. இனிமேல் நீ இப்படிப்பட்ட கடிதங்களை எனக்கு அனுப்பினால் அதை உடனே போலீசாருக்கு அனுப்பி உன்மேல் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்வதோடு, நீ அனுப்பும் மனிதனுக்கும் தக்க மரியாதை நடத்தி அனுப்புவேன். இந்தத் தடவை உன்னை மன்னித்து விடுகிறேன், ஜாக்கிரதை. மாசிலாமணி. என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படிக்கவே, இடும்பன் சேர்வைகாரன் அப்படியே இடிந்து உட்கார்ந்து போய் விட்டான். மாசிலாமணிக்காகத் தான் பாடுபட்டு தன்னை மரணதண்டனைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்க, அவன் நல்ல சமயத்தில் தன்னைக் கைவிட்டு விட்டானே என்ற கோபமும், ஆத்திரமும் காட்டுத்தீ போல அவனது மனதில் பொங்கி எழுந்தன. மாசிலாமணி எப்படியும் பணம் அனுப்புவான் என்றும், தான் உயிர் தப்பி