பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மாயா விநோதப் பரதேசி திலிருந்து எப்படியும் பணம் வரும். தாங்கள் வாக்களித்தபடி அதை வாங்கிக் கொண்டு எப்படியாவது என்னைத் தப்பவைத்து விடுங்கள். நான் எங்கேயாவது போய் எவர் கண்ணிலும் படாமல் ஒளிந்து கொள்ளுகிறேன். உங்கள் பிள்ளை குட்டிகளுக்கு தரும முண்டு. எஜமானே! நீங்கள் என்னைக் காப்பாற்றுவதாகச் சொன்னாலன்றி நான் எழுந்திருக்க மாட்டேன்" என்று கூறிக் கண்ணிரைப் பெருகவிட்டு குழந்தை போல விம்மி விம்மி அழுதான். அந்தச் சமயத்தில் ஒரு ஜெவான் உள்ளே வந்து சப் இன்ஸ்பெக் டரைப் பார்த்து, "எஜமானே! ஜானிஜான் கர்ன் சாயப்பு வந்து பக்கத்து அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். கும்ப கோணத்துக்குப் போன அவருடைய குமாஸ்தா திரும்பி வந்து ஒரு கடிதம் கொடுத்தாராம். இவர் வேறே எங்கேயோ வேலையாய்ப் போயிருந்தாராம். திரும்பி வீட்டுக்கு வந்தவுடன் குமாஸ்தா கடிதத்தைக் கொடுத்து, தாம் போய் வந்த வரலாற்றைச் சொன்னா ராம்; உடனே புறப்பட்டு சாயப்பு வந்தாராம். அவர் சேர்வை காரரை அழைக்கிறார்." என்றான். அதைக் கேட்ட சேர்வைகாரன் திடுக்கிட்டு மகிழ்ச்சி கொண்டு சரேலென்று எழுந்து நின்றான். உடனே சப் இன்ஸ்பெக்டர், "சேர்வைகாரரே சாயப்பு வந்திருக்கிறாராம் போய்ப் பார்த்துவிட்டு வாரும்" என்றார். ஜெவான் சேர்வைகாரனை அழைத்துக் கொண்டு வெளியில் போய் பக்கத்தில் இருந்த இன்னோர் அறையைக் காட்டி அதற்குள் அவனை அனுப்பினான். அந்த அறைக்குள் ஜானிஜான் கான் சாயப்பு தனியாக உட்கார்ந்திருந்தார். அங்கே சென்ற சேர்வை காரன் சாயப்புவுக்கு வணக்கமாக சலாம் செய்து அவரது முகத்தைப் பார்த்தான். அது சந்தோஷமற்றதாகத் தோன்றியது. உடனே சாயப்பு உற்சாகமற்ற குரலில் பேசத் தொடங்கி, "என்ன சேர்வைகாரரே! நான் வாக்குக் கொடுத்ததைக் கருதி எவ்வளவோ வேலையைக் கெடுத்துக் கொண்டு நான் என் குமாஸ்தாவை அனுப்பினேன். அது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கின