பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 157 கொஞ்ச நேரத்திற்கு முன் தான் வெளியிட்டாளாம். நீரும் மாசிலாமணிப் பிள்ளையும், இப்போது பிடிபட்டிருக்கும் ஆள்களும் சேர்ந்தே சட்டைநாத பிள்ளையை விடுவித்து கும்ப கோணத்தில் எங்கேயோ ஒளிய வைத்திருக்கிறீர்களாம். உப்பிலி யப்பன் கோவில் என்ற ஊரில் உள்ள ஒரு பாம்புப் பிடாரனிடத்தி லிருந்து நீர் தான் பாம்புகளை வாங்கி ஒரு பெட்டிக்குள் வைத்து திகம்பர சாமியாரிடம் கொடுத்து அவரைக் கொன்றிராம். இன்னம் நீர் இந்த ஆள்களோடு வந்து இந்த ஊர்க் கலெக்டருடைய பெண்ணை அபகரிக்க முயன்று அவருடைய பங்களாவில் நுழைந்து அங்கே பெண் வேஷத்தில் இருந்த கந்தசாமியைத் துக்கிக் கொண்டு போனிராம். கந்தசாமி இன்னம் அகப்படாமையால், அவரையும் நீங்களே கொன்று விட்டதாக அனுமானிக்கப் படுகிறது. அதுவுமன்றி, இப்போது வேலாயுதம் பிள்ளை முதலி யோரை மூளிப்படுத்த நீர் ஆள்களோடு வந்திராம். வந்த இடத்தில் நீர் மோதிரம் திருடி சிறைச்சாலை அடைந்த பின், உம்முடைய ஆள்கள் ஆள்மாறாட்டமாக ரமாமணியம்மாள் முதலியோரை மூளிப்படுத்தி விட்டார்களாம். இந்த விவரங்கள் எல்லாம் இப்போது தான் வெளியானதாக பெரிய டாக்டர் சொல்லுகிறார். ஏது, இனி நீர் தப்புவது துர்லபம். உமக்கு தீவாந்திர சிகூைடி கிடைக்கும் என்று முன்னே நினைத்தேன். இப்போது இருக்கும் நிலைமையில், உமக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நினைக்கிறேன். கும்பகோணத்தில் இருந்து பணம் வந்தால் கூட, நான் உம்மை எப்படித் தப்பவைப்பதென்பது தெரியவில்லை" என்றார். அதைக் கேட்ட இடும்பன் சேர்வைகாரன் திடீரென்று காலடியில் பேரிடிவிழக் கண்டவன் போல அப்படியே திக்பிரமை கொண்டு மருள விழிக்க ஆரம்பித்தான். அவனுடைய தலை சுற்ற ஆரம்பித்தது. அறிவு பிறழ்ந்து போயிற்று. கைகால்கள் உடம்பு முதலிய யாவும் கிடுகிடென்று ஆடுகின்றன. அவன் வேரற்ற மரம் போல பொத்தென்று சப் இன்ஸ்பெக்டருக் கெதிரில் விழுந்து அவரது காலைப் பிடித்துக் கொண்டு, "சுவாமிகளே என்னை நீங்கள் எப்படியாவது காப்பாற்றியே தீரவேண்டும். கும்பகோணத்