பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 மாயா விநோதப் பரதேசி முன்னர் சமாசாரப் பத்திரிகைகளில் வெளியாயின. அதை அந்த மாசிலாமணிப் பிள்ளையும் படித்திருப்பார்; அதனால் அவர் உம்மேல் கோபமடைந்து பேசாமல் இருந்து விடுவாரோ என்று நினைக்கிறேன்" என்றார். திக்பிரமை கொண்டு பைத்தியக்காரன் போல விழித்துக் கொண்டு நின்ற சேர்வைகாரன், "எஜமானே! எனக்கு யாதொரு தகவலும் தெரியாது. நான் எந்த ஆளையும் அனுப்பவுமில்லை; இப்படிப் பட்ட காரியத்தைச் செய்யச் சொல்லவுமில்லை" என்றான். சப் இன்ஸ்பெக்டர், "அன்றைய தினம் இரவில் கையும் மெய்யு மாய்ப் பிடிபட்ட ஆள்கள் உண்மையைச் சொல்லி விட்டார்கள். ஆயினும், இந்த ரமாமணியம்மாள் முதலியோர் இன்னம் சரியான படி பேசத் தகுந்த நிலைமைக்கு வரவில்லை. நாங்கள் அவர் களுடைய வாக்கு மூலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய ஆள்கள் சொன்னதும் ரமாமணியம்மாள் முதலியோர் சொல்வதும் ஒத்துப் போனால், உடனே உங்களை நாங்கள் மாஜிஸ்டிரேட்டிடம் விசாரணைக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் அந்தமான் தீவிற்குப் போவது நிச்சயமான விஷயம்" என்றார். அதைக் கேட்ட இடும்பன் சேர்வைகாரன், "சுவாமிகளே எது எப்படி இருந்தாலும், என்னை மாத்திரம் தாங்கள் தப்பவைத்துவிட வேண்டும். சாயப்பு ஐயா சொன்னபடி நான் எப்படியும் பதினைந்து ஆயிரம் ரூபாய் வாங்கித் தங்களுக்குக் கொடுத்து விடுகிறேன். மற்றவர்களை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளுங்கள்" என்று கூறிக் கெஞ்சி மன்றாடினான். அப்போது சப் இன்ஸ்பெக்டருக்குப் பக்கத்தில் இருந்த டெலிபோனில் மணி கணகணவென்று அடித்துக் கொண்டது. சப் இன்ஸ்பெக்டர் அதை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு அதில் வந்த செய்தியைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவரது முகம் உடனே மிகுந்த களிப்பும் உற்சாகமும் அடைந்தது. அவர் அந்த யந்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, "என்ன ஐயா சேர்வைகாரரே! ஆஸ்பத்திரியிலிருந்து பெரிய டாக்டர் துரை இப்போது என்னோடு பேசினார். ரமாமணியம்மாள் உங்களுடைய சங்கதி முழுதையும்