பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 155 உடனே சப் இன்ஸ்பெக்டர் நிமிர்ந்து கம்பீரமான பார்வையாக அவனைப் பார்த்து, "என்ன ஐயா! சேர்வைகாரரே இப்போது மணி 12 ஆகிறது. கும்பகோணத்திலிருந்து ஒரு தகவலும் தெரிய வில்லையே. சாயப்பு தன்னுடைய குமாஸ்தாவை அனுப்பிய தாகச் சொன்னார். அவன் இன்னமும் வரவில்லையே. வண்டி காலை ஆறு மணிக்கே வந்திருக்குமே. அவன் வந்திருந்தால், இந்நேரம் தகவல் தெரிவிக்காமல் இருக்க மாட்டானே" என்றார். கும்பகோணத்துச் செய்தி ஏதாவது சப் இன்ஸ்பெக்டர் தெரிவிப்பார் என்று எதிர்பார்த்து வந்த சேர்வைகாரனுக்கு அது பெருத்த ஏமாற்றமாக முடிந்தது. அவனது முகம் உடனே வாட்ட மடைந்து கீழே சாய்ந்தது. அவனது உற்சாகமும் மகிழ்ச்சியும் போன இடம் தெரியாமல் மறைந்து போயின. அவன் அதற்கு என்ன மறுமொழி சொல்வதென்பதை அறியாதவனாய்த் தத்தளித்து, "எஜமானே! என் கடிதம் அந்த மனிதரிடம் போயிருந்தால், அவர் ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டார்; உடனே தக்க ஏற்பாடு செய்வார். இந்த குமாஸ்தா போன காலத்தில், அவர் ஊரில் இல்லையோ, அல்லது, வேறே என்ன அசந்தர்ப்பமோ என்பது தெரியவில்லை. எப்படியும் நல்ல சேதி வந்து விடும். தாங்கள் கொஞ்சம் பொறுத்து எதையும் செய்வது நலம்" என்றான். அதைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் தமக்கெதிரில் இருந்த ஒரு படத்தை எடுத்து நீட்டி, "இதோ பார்த்திரா உம்முடைய ஆட்கள் செய்த வேலையை? இதை எடுத்துப் பாரும்" என்றார். இடும்பன் சேர்வைகாரன் ஆவலோடு மேஜையண்டை நெருங்கி படத்தை வாங்கிப் பார்த்தான். உடனே அவனது முகம் மாறி விகார மடைந்து பெருத்த திகில்ையும் மனக்குழப்பத்தையும் காட்டியது. "ஆகா! என்ன இது! முதலியோர் அல்லவா மூக்கு காதுகள் எல்லாம் அறுபட்டுக் கிடக்கிறார்கள். அடடா! என்ன அக்கிரமம் இது!" என்று வியப்போடு கூறிய வண்ணம் கலங்கித் தத்தளித்தவனாய் அப்படியே நின்றான். சப் இன்ஸ்பெக்டர், "உம்முடைய ஆள்கள் இவர்களை இப்படி மூளிப்படுத்தி விட்டார்கள் என்ற செய்தி சில தினங்களுக்கு