பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 173 யாருக்குப் பிரியமோ, அவரவர்கள் செலவு செய்யலாம். அதோடு, என் கருமவினை தொலைய, நானும் என்னால் இயன்ற வரையில் செலவு செய்கிறேன். எல்லோரும் சேர்ந்து இந்தக் காரியத்தை அமோகமாக நடத்தி வைப்போம். ஆனால், நாம் எல்லோரும் சேர்ந்து பலதினங்கள் வரையில் இவ்விடத்திலிருந்து இந்தக் காரியங்களைச் செய்வது நம்முடைய சம்பந்திப் பிள்ளைக்கு நிரம்பவும் சிரமமாகவும், அசெளகரியமாகவும் இருக்கும் என்பது நிச்சயம். ஆகவே, நாம் கோமளேசுவரன் பேட்டையில் உள்ள என்னுடைய கிரகத்திற்குப் போய்விடுவதே உசிதமாகத் தோன்று கிறது" என்றார். அதைக் கேட்ட பட்டாபிராம பிள்ளையின் கண்கள் கலங்கின. அவரது முகம் வாட்டமடைந்தது. அவர் வேலாயுதம் பிள்ளையை நோக்கி நிரம்பவும் மரியாதையாகவும், வணக்கமாகவும் பேசத் தொடங்கி, "அண்ணா! தங்களைப் போலவும் தங்கள் பந்துக் களைப் போலவும் உள்ள புண்ணியாத்மாக்களின் தரிசனமும் சகவாசமும், நான் எத்தனை ஜென்மங்களில் தவம் செய்தாலும் எனக்குக் கிடைக்குமா? இதை நான் ஒரு பெரிய பாக்கியமாக அல்லவா மதித்து அப்படியே பூரித்துப் போய் இருக்கிறேன். அதுவுமன்றி, அது யாருடைய காரியம்? என் செல்வ மருமகப் பிள்ளை காணாமல் போயிருப்பதைக் கருதிச் செய்யப்படும் இந்தப் புண்ணிய காரியம் முழுதையும் செய்து வைக்க முக்கிய மாக நான் தானே கடமைப்பட்டவன். ஆகையால், தாங்களாவது மற்றவராவது எள்ளளவும் கிலேசம் என்பதே கொள்ளாமல் எத்தனை வருஷ காலமானாலும் இவ்விடத்திலேயே இருந்து இந்தக் காரியத்தை நடத்தலாம். இந்த பங்களாவையும் என் சொத்துக்களையும் ஆள் மாகாணங்களையும், என்னையும் நான் இந்த நிமிஷம் முதல் தங்கள் வசம் ஒப்புவித்துவிட்டேன். தங்கள் பிரியப்படி நடந்து கொள்ளலாம்" என்று நிரம்பவும் உருக்கமாக மொழிந்தார். முடிவாக சுந்தரம் பிள்ளை புன்சிரிப்போடு பேசத் தொடங்கி, "நாங்கள் வருஷக் கணக்கில் இங்கே இருக்க வேண்டும் என்று நம்முடைய புதிய சம்பந்திப் பிள்ளை சொன்னது ஒரு விதத்தில் சந்தோஷத்தை உண்டாக்குகிறதானாலும், இந்தச் சந்தர்ப் பத்தில் அது மிகுந்த விசனத்தைத் தருகிறது. அடுத்த நிமிஷத்தில்