பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 மாயா விநோதப் பரதேசி நம்முடைய பிள்ளையாண்டான் வந்துவிட வேண்டும் என்றும், நம்முடைய பூஜை சமாப்தி அடைய வேண்டும் என்றும், எல்லோரும் அவரவர்க்ள் இருப்பிடத்தை அடைய வேண்டும் என்றும், நாம் எல்லோரும் கடவுளிடம் முறையிட்டுப் பிரார்த்தனை செய்து கொள்வோம்" என்றார். அதன் பிறகு, வேலாயுதம் பிள்ளையும் மற்றவர்களும் கலந்து பேசி, காணாமற் போயிருக்கும் கந்தசாமி அகப்படுகிற வரையில் எல்லோரும் அவ்விடத்திலேயே இருப்பதென்றும், சிவபூஜை தான தருமம் முதலியவற்றை ஒவ்வொரு நாளும் அபரிமிதமாய்ச் செய்வதென்றும், கந்தசாமி வந்தவுடன் நிச்சயதார்த்தம் கலியாணம் ஆகிய எல்லாச் சடங்குகளையும் நிறைவேற்றிக் கொண்டே ஊருக்குத் திரும்புவதென்றும் தீர்மானித்துக் கொண்டு, அதற்கு ஆகவேண்டிய காரியங்களை எல்லாம் அப்போதிருந்தே செய்யத் தொடங்கினார்கள். அவர்களது நிலைமை அங்ங்னம் இருக்க, பெண் விருந்தினர் யாவரும் தங்கள் போஜனத்தை முடித்துக் கொண்ட பின்னர், கந்தசாமிக்குக் கட்டுவதாய் வரிக்கப்பட்டிருந்த பெண்ணைப் பார்க்க வேண்டும் என்ற அவாவினால் துண்டப்பட்டு, அதைத் திரிபுரிசுந்தரி யம்மாளிடம் வெளியிட, அந்த அம்மாள் அந்த செய்தியை முன்னாகவே மனோன்மணியம்மாளுக்கு அறிவித்து விட்டு எல்லோரையும் தன்னோடு கூட அழைத்துக் கொண்டு மனோன்மணியம்மாள் இருந்த விடுதியை அடைந்தாள். அப்போது மனோன்மணியம்மாள் எவ்வித நிலைமையில் இருந்தாள் என்பதை நாம் உணர்வது அவசியமான விஷயம். மனோன்மணியம்மாள் இங்கிலீஷ் கலாசாலையில் பி.ஏ., வகுப்பில் படித்தாள் என்பதில் இருந்தும், அவள் கந்தசாமியுடன் பேசிய மாதிரியில் இருந்தும், அவள் நிரம்பவும் பண்படுத்தப்பட்ட மனமும், மகா கூர்மையான புத்தியும், சிறந்த பகுத்தறிவும் வாய்ந்த வளாய் இருந்தாள் என்பது நமது வாசகர்களுக்கு நன்கு விளங்கி இருக்கும். ஆயினும், இப்போது ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் இங்கிலீஷ் படிப்பில் நமது நாட்டில் உள்ள தெய்விகம் பொருந்திய