பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 175 நூல்கள் எதுவும் பாடமாக வைக்கப்படுவதில்லை ஆதலால், நமது சுயயோக்கியதையும், சுயமதிப்பும் இவ்வளவு என்பதை இக்காலத்து மாணவர்கள் அறிந்து கொள்ள சந்தர்ப்பம் இல்லாது போனது பற்றி, அவர்கள் நம் தேசத்து விஷயங்களை இகழவும், பிற தேசத்து விஷயங்களைப் புகழவும் நேருகின்ற தென்பது நாம் கூறாமலே விளங்கும். ஆகவே, மனோன்மணியம்மாள் ஆரம்பத்தில் தவறான கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தது, அவளுக்குப் போதிக்கப்பட்ட கல்வி முறையினால் ஏற்பட்ட பலன் என்றே நாம் கொள்ள வேண்டுமன்றி, அவள் உண்மையான விவேகமும் நற்குண நல்லொழுக்கமும் அற்றவள் என்று கொள்வது சிறிதும் பொருந்தாது. ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறே பதம் என்கிறபடி, சூக்ஷம புத்தியுடைய மேதாவிகளின் மனம் மின்னல் தோன்றி மறைவது போலப் பளிச்சென்று விஷயங்களின் உண்மைகளை கிரகித்து அதிதுரிதத்தில் ஆக்ஷேபனை சமாதானங்களை அதுவே செய்து கொண்டு போய் உண்மையைக் கண்டு பிடித்துவிடும் ஆதலால், வேத சாஸ்திரங் களின் சாரம் போலவும், உலகத்தில் உள்ள சர்வ மதங்களையும் கடைந்து திரட்டி எடுத்த வெண்ணெய் போலவும் அமைந்துள்ள தாயுமான சுவாமிகளின் முதல் மூன்று பாக்களைக் கேட்டு, அவற்றுள் குன்று குன்றாகக் குவிந்து சமுத்திரம் போல ஆழங் காண இயலாமல் பதிந்து கிடக்கும் உண்மை ஞானத்தை எண்ண எண்ண, மனோன்மணியம்மாளின் திகூடிண்ய புத்தி சடேரென்று மாறுபட்டு பொறித்தட்டும் நேரத்தில் உண்மை இன்னது என்பதைக் கண்டு, அவளது மனப்போக்கையும் நடையுடை பாவனைகளையும் அடியோடு மாற்றி அவளுக்குப் புத்துயிர் கொடுத்து விட்டது. ஆகவே, அவள் தனது இங்கிலீஷ் கொள்கை களை எல்லாம் ஒரே நொடியில் விலக்கினாள்; தான் அது வரையில் சென்ற துறை தவறான தென்பதை உணர்ந்து கொண்டாள், மனிதர் கல்வி கற்பது இந்த லோகத்தில் ஏராளமாகப் பொருள் தேடி, ஆடம்பரமாக உண்டு உடுத்தி, எவருக்கும் கீழ்ப்படியா வணங்காமுடி மன்னராய் இருந்து குதூகலமாகப் பொழுதைப் போக்குவதற்கு மாத்திரமல்ல என்பதையும், அவைகளைக் காட்டிலும் மேலானதும், மனிதர் சாசுவதமாக நாடக் கூடியதுமான